புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் விரைவில்

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி கார் வரும் டிசம்பர் மாதம் விற்பனைக்கு வருவதற்க்கு வாய்ப்புகள் உள்ளது. புதிய  ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் புதிய வசதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட என்ஜின் இருக்கும்.

Ford-EcoSport-suv
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

ஃபோர்டு நிறுவனம் சமீபத்தில் ஃபிகோ ஆஸ்பயர் , ஃபிகோ கார்களை விற்பனைக்கு கொண்டு வந்தது. மேலும் புதிய ஃபோர்டு என்டெவர் எஸ்யூவி மற்றும் மேம்படுத்தப்பட்ட ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவி போன்றவை வரவுள்ளது.

loading...

புதிய ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்  மாடலில் ஃபிகோ , ஆஸ்பயர் கார்களில் பயன்படுத்தப்பட்டிருந்த அதே என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் 1.0 லிட்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும்.

Ford-EcoSport-dashboard
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்

100பிஎஸ் ஆற்றலை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். ஃபிகோ , ஃபிகோ ஆஸ்பயர் கார்களில் இந்த என்ஜின் மைலேஜ் 25.83கிமீ ஆகும். இதற்க்கு ஈடாகவே ஈக்கோஸ்போர்ட் மைலேஜ் அமையும். மேலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடலில் 6 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக இருக்கும். மேலும் டெயில் கேட்டில் ஸ்பேர் வீல் இல்லாத மாடல் இந்திய சந்தைக்கு வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அவை ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

Ford-EcoSport-suv-rear
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் 

2016 Ford Ecosport to launch on December 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin