புதிய எம்பிவி கார்கள் – 2015

இந்தியாவில் எஸ்யூவி கார்களை தொடர்ந்து அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது  எம்பிவி கார்களுக்கு வரும் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் களமிறங்கும் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட எம்பிவி கார்களை கானலாம்.

டொயோட்டா இன்னோவா

மேம்படுத்தப்பட்ட புதிய இன்னோவா வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரலாம். தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலில் இருந்து முற்றிலும் முகப்பினை மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிகின்றது. தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ள இன்னோவா பல நவீன வசதிகளை கொண்டிருக்கும். என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது.

New Toyota Innova

வருகை; 2015 இறுதியில்
விலை; ரூ.10- 17 லட்சத்தில்

மாருதி சுஸூகி எர்டிகா

மாருதியின் புதிய எர்டிகா முகப்பு விளக்குகள், பின்புற விளக்குகள் மற்றும் உட்டப்புற கட்டமைப்பில் மாறுதல்கள் பெற்று விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

maruti ertiga
Videos

வருகை; 2015 மத்தியில்
விலை; ரூ.6-9 லட்டசத்தில்
போட்டியாளர்கள்; மொபிலியோ, லாட்ஜி

ரெனோ லாட்ஜி

ரெனோ லாட்ஜி எம்பிவி தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ளதால் மிக விரைவில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மிகவும் சிறப்பான வசதிகள் கொண்ட எம்பிவாயாக இருக்கும்.

Renault Lodgy mpv

வருகை; 2015 தொடக்கத்தில்
விலை; ரூ.8-11 லட்டசத்தில்
போட்டியாளர்கள்; மொபிலியோ, எர்டிகா, சைலோ

ஃபியட் 500எல்

ஃபியட் 500 எல் கார் மிகவும் சிறப்பான வடிவமைப்பினை பெற்றுள்ள காராகும். பல நவீன வசதிகளை கொண்ட இந்த எம்பிவி இந்தியாவிற்க்கு வரலாம்.

fiat 500l

வருகை; 2015 மத்தியில்
விலை; ரூ8-10 லட்டசத்தில்

டட்சன் கோ+

வரும் ஜனவரி 15 விற்பனைக்கு வர உள்ள  டட்சன் கோ ப்ளஸ் கார் கோ ஹேட்ச்பேக் காரினை அடிப்படையாக கொண்டதாகும். மிகவும் விலை மலிவான எம்பிவி மாடலாக கோ ப்ளஸ் விளங்கும்.

Datsun Go+ MPV

வருகை; 2015 ஜனவரி 15
விலை; ரூ.4-6 லட்டசத்தில்

Comments