புதிய எஸ்யூவி கார்கள் – 2015

  இந்தியர்களின் மிகவும் விருப்பமான தேர்வு என்றால் அது எஸ்யூவி காராகத்தான் இருக்கும். சிறிய எஸ்யூவி முதல் மிக பிரமாண்டாமான எஸ்யூவி கார்கள் வரை இந்தியாவில் விற்பனை உள்ளன. 2015 ஆம் வருடத்தில் வரவிருக்கும் புதிய  எஸ்யூவி வரவுகளை கான்போம்.

  ஆடி க்யூ 7 

  சொகுசு கார் சந்தையில் மிக பிரபலமான மாடலான ஆடி க்யூ 7 எஸ்யூவி கார் வருகின்ற ஆண்டியின் மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது. முந்தைய மாடலைவிட குறைவான எடையில் விற்பனைக்கு வரவுள்ளது. தற்பொழுது இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

  audi q7 suv

  வருகை; 2015 மத்தியில்
  விலை; ரூ.60- 85 லட்சத்திற்க்குள் இருக்கும்
  போட்டியாளர்கள்; பென்ஸ் ஜிஎல்-கிளாஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்5

  ஜீப் கிராண்ட் செரோக்கீ

  ads

  ஃபிய்ட் நிறுவனத்தின் அங்கமான ஜீப் பிராண்டில் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி காரை விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் தீவரமாக செயல்பட்டு வருகின்றது.

  jeep cheroke

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.55லட்சம் முதல் 70 லட்சத்திற்க்குள் இருக்கலாம்
  போட்டியாளர்கள்; ஆடி க்யூ7 , பிஎம்டபிள்யூ எக்ஸ்5

  லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட்

  தற்பொழுது விற்பனையில் உள்ள ஃபிரிலேண்டர் 2 காருக்கு மாற்றாக லேன்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் விற்பனைக்கு வரும். 7 இருக்கைகள் கொண்ட நவீன தொழில்நுட்பத்தினை பெற்ற எஸ்யூவியாக விளங்கும்.

  land rover discovery sport

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.45லட்சம் முதல் 55 லட்சத்திற்க்குள் இருக்கலாம்
  போட்டியாளர்கள்; வால்வோ எக்ஸ்சி 60

   போர்ஷே கேயேன் ஃபேஸ்லிஃப்ட்

  போர்ஷே கேயேன் மேம்படுத்தப்பட்ட மாடல் சில வடிவ மாற்றங்கள் மற்றும் என்ஜின் மாற்றங்களுடன் வருகின்றது.

  போர்ஷே கேயேன்

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.1 கோடி முதல் 1.75 கோடி வரை
  போட்டியாளர்கள்; ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்

  ஜீப் ரேங்லர்

  ஃபிய்ட் நிறுவனத்தின் அங்கமான ஜீப் பிராண்டில் ரேங்லர் எஸ்யூவி காரும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  jeep wrangler

  வருகை; 2015 மத்தியில்
  விலை; ரூ.30 லட்சம் முதல் 40 லட்சத்திற்க்குள்
  போட்டியாளர்கள்; ஆடி க்யூ5

  பிஎம்டபிள்யூ எக்ஸ்6

  பிஎம்டபிள்யூ எக்ஸ்6 காரானது புதிய பரினாமத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. எக்ஸ் 6 காரில் பல நவீன வசதிகளை பொற்றிருக்கும்.

                         BMW X5

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.70 லட்சம் முதல் 80 லட்சத்திற்க்குள்

  ஃபோர்டு என்டோவர்

  தற்பொழுது விற்பனையில் உள்ள ஃபோர்டு என்டோவரை விட தோற்றத்தில் சற்று மாறுபட்டவையாகவும், புதிய என்ஜின் மற்றும் உட்கட்டமைப்பினை பெற்றிருக்கும்.

  ford endeavour

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.22 லட்சம் முதல் 28 லட்சத்திற்க்குள்
  போட்டியாளர்கள்; பார்ச்சூனர், பஜீரோ ஸ்போர்ட்

  ஹோண்டா சிஆர்-வி டீசல்

  புதிய ஹோண்டா சிஆர்வி டீசல் என்ஜின் மாடலில் வருவதற்க்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் தோற்றத்தில் மாறுதல் பெற்றிருக்கும்.

  CRV

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.22 லட்சம் முதல் 28 லட்சத்திற்க்குள்
  போட்டியாளர்கள்; ஸ்கோடா எட்டி

  ஹூண்டாய் ஐஎக்ஸ்25

  ஹூண்டாய் ஐஎக்ஸ்25 குறைவான விலை கொண்ட காம்பெக்ட் எஸ்யூவி சந்தையில் விற்பனைக்கு வர உள்ளது. மேலும் பல நவீன வசதிகளை கொண்டிருக்கும்.

  hyundai ix25 suv coming soon

  வருகை; 2015 மத்தியில்
  விலை; ரூ.8 லட்சம் முதல் 11 லட்சத்திற்க்குள்
  போட்டியாளர்கள்; டஸ்ட்டர் , டெரோனோ

  மாருதி சுசூகி ஒய்பிஏ

  மிகவும் எதிர்பார்க்கப்படும் மாருதி ஒய்பிஏ எஸ்யூவி காரானது. மாருதி எஸ்யூவி சந்தையில் சிறப்பான விற்பனை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

  suzuki yba

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.6 லட்சம் முதல் 9.5 லட்சத்திற்க்குள்
  போட்டியாளர்கள்; ஈக்கோஸ்போர்ட்

  மாருதி எக்ஸ் கிராஸ்

  மாருதி எக்ஸ் கிராஸ் செடான் மற்றும் எஸ்யூவிக்கு இடையில் நிலை நிறுத்த உள்ளனர்.

  s cross car

  வருகை; 2015 இறுதியில்
  விலை; ரூ.8 லட்சம் முதல் 12 லட்சத்திற்க்குள்

  புதிய எம்பிவி கார்கள் 2015

  புதிய ஹேட்ச்பேக் கார்கள் 2015

  Comments