புதிய சுஸூகி ஹயாட்டே பைக் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட சுஸூகி ஹயாட்டே பைக் ரூ.59,905 விலையில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுஸூகி ஹயாட்டே பைக்கின் தோற்றம் மட்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

சுஸூகி ஹயாட்டே பைக்

அளவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் சுஸூகி ஹயாட்டே மாடலை விழா காலத்தை முன்னிட்டு சில தோற்ற மாற்றங்கள் மற்றும் சில வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

புதிய சுசூகி ஹயாட்டே பைக்கில் புதிய பாடி ஸ்டிக்கர் , பாடி கலர் பேனல் , பாரமரிப்பு இல்லாத பேட்டரி , ட்யூப்லஸ் டயர் , 5 விதமான அட்ஜெஸ்டபிள் வசதி கொண்ட பின்புற சாக் அப்சார்பர் ஆகும்.

8.3பிஎச்பி ஆற்றலை வழங்கும் 112.8சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.  சுஸூகி ஹயாட்டே பைக்கின் விலை ரூ.59,905 ( ஆன்ரோடு சென்னை ) மற்ற மாவட்டங்களில் ஆன்ரோடு ரூ.59,891 ஆகும்.

சுஸூகி ஹயாட்டே பைக்

 Suzuki Hayate refreshed Launched