புதிய செவர்லே என்ஜாய் எம்பிவி விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட புதிய செவர்லே என்ஜாய் எம்பிவி கார் சிறிய மாற்றங்களுடன் ரூ. 6.24 லட்சம் முதல் ரூ.8.79 லட்சம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ஜாய் எம்பிவி மிக சிறப்பான இடவசதி கொண்டதாகும்.

செவர்லே என்ஜாய் எம்பிவி
செவர்லே என்ஜாய் எம்பிவி 

புதிய என்ஜாய் காரின் வெளிதோற்றத்தில் பதிவென் பிளேட் ஸ்லாட்க்கு மேலு குரோம் பட்டை மற்றும் பி பில்லர் கருப்பு நிற ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. உட்புறத்தில் புதிய மூன்று ஸ்போக் ஸ்டீயரிங் வீல் உடன் இணைந்த சிலவர் இன்சர்ட் , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் , குரோம் டீடெயலிங் கேபின் போன்றவை புதிதாகும்.

முந்தைய என்ஜாய் என்ஜினில் மாற்றங்கள் இல்லை. 74.8பிஎஸ் ஆற்றலை தரவல்ல 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மற்றும் 100.2பிஎஸ் ஆற்றலை தரவல்ல 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

என்ஜாய் LTZ டாப் வேரியண்டில் ஏபிஎஸ் , இபிடி மற்றும் முன்பக்கத்தில் இரட்டை காற்றுப்பைகள் தரப்பட்டுள்ளது.

செவர்லே என்ஜாய் எம்பிவி

என்ஜாய் எம்பிவி காரின் பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 13.7கிமீ மற்றும் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 18.2கிமீ ஆகும்.

செவர்லே என்ஜாய் எம்பிவி விலை ரூ. 6.24 லட்சம் முதல் ரூ.8.79 லட்சம் ஆகும். (ex-showroom Delhi)

2015 Chevrolet Enjoy MPV launched starting price at RS. 6.24 lakhs