புதிய செவர்லே க்ரூஸ் கார் அறிமுகம்

இரண்டாம் தலைமுறை செவர்லே க்ரூஸ் கார் புதிய என்ஜின் , தோற்றம் மற்றும் உட்புறம் என அனைத்திலும் புதிய மாறுதல்களுடன் செவர்லே க்ரூஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2016 செவர்லே க்ரூஸ் கார்

சீனாவில் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட செவர்லே க்ரூஸ் காரின் பாதிப்பினை புதிய க்ரூஸ் பெருமளவு பெற்றுள்ளது. முந்நைய மாடலை விட இலகு எடை மற்றும் கூடுதல் இடவசதியை கொண்டுள்ளது. புதிய க்ரூஸ் ஜிஎம் நிறுவனத்தின் புதிய D2 FWD தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

மிக ஸ்டைலான தோற்றத்தில் இளம் வாடிக்கையாளர் முதல் அனைத்து வாடிக்கையாளர்களையும் கவரும் தோற்றத்தில் இந்த க்ரூஸ் வந்துள்ளது. இம்பாலா மற்றும் மாலிப் மாடல்களின் சாயலினை தழுவியுள்ளது.

தோற்றத்தில் நேர்த்தியான  முகப்பு கிரில் ப்ராஜெகெடர் முகப்பு விளக்குகள் , பகல் நேர எல்இடி விளக்குகள் , புதிய பனி விளக்குகள் , பக்கவாட்டில் நேர்த்தியான் புரஃபைல் மற்றும் பின்புறத்தில் கருப்பு நிற பேனல் என அழகான தோற்றத்தில் க்ரூஸ் விளங்குகின்றது.

செவர்லே க்ரூஸ் டேஸ்போர்டு
ads

செவர்லே க்ரூஸ் டேஸ்போர்டு
செவர்லே க்ரூஸ் இருக்கை

உட்புறத்தில் எம்-லிங்க இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , 7 இஞ்ச் வண்ண தொடுதிரை , ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளது.

2016 செவர்லே க்ரூஸ் கார் முந்தைய மாடலை விட 113கிலோ வரை எடை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 15மிமீ வீல்பேஸ் கூடுதலாகவும் வாகனத்தின் மொத்த நீளம் 69மிமீ கூட்டப்பட்டு 4666மிமீ நீளத்தினை கொண்டிருக்கும். புதிய மோஸ்ட் மாஸ்-எஃபிசன்ட் (most mass-efficient chassis)அடிசட்டத்தின் உறுதி தன்மை 27 % அதிகரிக்கப்பட்டுள்ளது.

செவர்லே க்ரூஸ் கார்

புதிய செவர்லே க்ரூஸ் காரில் இரண்டு புதிய என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது.  இந்தியாவில் 153பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 1.4 லிட்டர் ஈக்கோடெக் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் முந்தைய 2.0 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக புதிய 1.6 ட்ர்போ டீசல் என்ஜின் பயன்படுத்த உள்ளனர். டீசல் என்ஜின் ஆற்றல் மற்றும் டார்க் விபரம் வெளியிடப்படவில்லை.

க்ரூஸ் காரில் 10 காற்றுப்பைகள் , இஎஸ்பி , வாகன்ம் உருளுவதை தடுக்கும் ரோல்ஓவர் மைகிரேஷன் ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் நிரந்தரமாக அனைத்து வேரியண்டிலும் இருக்கும். டிஸ்க் பிரேக் , ஜிஎம் ஆன்ஸ்டார் 4G LTE அமைப்பு வை-ஃபை போன்ற அம்சங்களை கொண்டிருக்கும்.

செவர்லே க்ரூஸ் rear

15 , 17 மற்றும் 18 இஞ்ச் என மூன்று விதமான ஆலாய் வில் ஆப்ஷனில் கிடைக்கும். எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் , ட்ராக்‌ஷன் கட்டுப்பாடு , லேன் அசிஸ்ட் , ரியர் கிராஸ் ட்ராஃபிக் அலர்ட் போன்ற அம்சங்களும் இருக்கும்.

L , LS மற்றும் LT வேரியண்டிலும் கூடுதலாக பிரிமியர் என்ற பெயரில் டாப் வேரியண்டிலும் வரவுள்ளது. இந்தியா உள்பட மொத்தம் 40க்கு மேற்பட்ட நாடுகளில் புதிய செவர்லே க்ரூஸ் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில் அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வரலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தும் செவர்லே க்ரூஸ் RS மாடலுடையதாகும்.

செவர்லே க்ரூஸ் கார்

India-bound 2016 Chevrolet Cruze Revealed

Comments