புதிய செவர்லே பீட் விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட புதிய செவர்லே பீட் கார் ரூ.4.28 லட்சம் முதல் ரூ.5.55 லட்சம் வரையிலான விலையில் மேம்படுத்திய செவர்லே பீட் காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

Chevrolet Beat Exteriors

உட்புற மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் அதிகரிக்கப்பட்டு , புதிய வேரியண்ட் பெயருடன் வெளிதோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றங்களை மட்டும் பெற்றுள்ள பீட் LTZ வேரியண்டில் முன்பக்க ஓட்டுனர் மற்றும் பயணிக்கான முன்பக்க இரட்டை காற்றுப்பைகளுடன் ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. முந்தையை LT (0) வேரியண்டுக்கு மாற்றாக LTZ நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

உட்புறத்தில்  ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள் , ஓட்டுனர் இருக்கை உயரம் மாற்றும் வசதி , சில்வர் பட்டை , ரீமோட் கீலெஸ் என்ட்ரி கீ ஃபோல்டபிள் கீயாக வந்துள்ளது. வெளிதோற்றத்தில் முகப்பு விளக்கின் சுற்றி கருப்பு வண்ணம் , புதிய ரியர் ஸ்பாய்லர் டெயில் விளக்கு , பாடி வண்ண ஹேண்டில் மற்றும் பின்புற பம்பர் இரட்டை வண்ணத்தில் போன்ற அம்சங்களை சேர்த்துள்ளது.

Chevrolet Beat Interiors

என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை . பெட்ரோல் பீட் காரில் 1.2 லிட்டர் 4 சிலிண்டர் ஆற்றல் 79 bhp மற்றும் 107 Nm டார்க் வெளிப்படுத்தும். டீசல் பீட் காரில்  1.2 லிட்டர் 3 சிலிண்டர் ஆற்றல் 58.5 bhp மற்றும் 149 Nm டார்க் வெளிப்படுத்தும். இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

செவர்லே பீட் டீசல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 25.44 கிமீ ஆகும். பீட் பெட்ரோல் காரின் மைலேஜ் லிட்டருக்கு 17.8 கிமீ ஆகும்.  மேலும் LT வேரியண்டில் ஓட்டுனர் பக்க காற்றுப்பை மற்றும் கூடுதலாக சிவப்பு மற்றும் கிரே வண்ணம் சேர்பக்கப்பட்டுள்ளது.

[envira-gallery id="7161"]

 

Comments

loading...