புதிய பஜாஜ் அவெஞ்சர் பைக் விரைவில்

பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸர் பைக்கில் புதிய மேம்படுத்தப்பட்ட அவென்ஜர் பைக் இன்னும் ஒரு சில மாதங்களில் விற்பனைக்கு வருகின்றது. புதிய பஜாஜ் அவெஞ்சர் பைக்கில் பல்சர் ஆர்எஸ்200 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

பஜாஜ் அவெஞ்சர் பைக்
பஜாஜ் அவெஞ்சர் பைக்

தற்பொழுது விற்பனையில் உள்ள 220சிசி அவெஞ்சருக்கு பதிலாக புதிய பல்சர் ஆர்எஸ் 200 என்ஜினுடன் விலையில் மாற்றங்கள் இருக்காது. மேலும் தோற்றத்தில் சில மாற்றங்களை பெற்றிருக்கலாம்.

புதிய முகப்பு விளக்குகள் , பாடி ஸ்டீக்கரிங் , புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மற்றும் குரோம் பூச்சூகளை பெற்றிருக்கும். மேலும் சஸ்பென்ஷன்  , பிரேக்கிங் மற்றும் இருக்கையின் சொகுசு தன்மை போன்றவை மேம்படுத்தப்பட்டிருக்கும்.

பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் உள்ள 23.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 200சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கலாம்.

Ads

புதிய பஜாஜ் அவெஞ்சர் பைக் இன்னும் ஒரு சில மாதங்களில் சந்தைக்கு வரவுள்ளது.

All New Bajaj Avenger to get cosmetic updates and new engine

Comments