புதிய பஜாஜ் அவெஞ்சர் பைக் சில தினங்களில்

பஜாஜ் அவெஞ்சர் பைக்கில் புதிய என்ஜின் மற்றும் சில தோற்ற மாற்றங்களை பெற்று 3 வேரியண்டில் விற்பனைக்கு இன்னும் சில நாட்களில் வரவுள்ளதாக தெரிகின்றது.

க்ரூஸர் பைக் ரகத்தில் இடம்பெற்றுள்ள பஜாஜ் அவெஞ்சர் சராசரி விற்பனையை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றது. பல்சர் 200 வரிசை பைக்கில் உள்ள அதே என்ஜின் பொருத்தப்பட உள்ளதாம்.

பல்சர் ஆர்எஸ் 200 பைக்கில் உள்ள 199.5சிசி என்ஜின் அவெஞ்சர் பைக்கில் பொருத்தப்பட்ட உள்ளது. இதன் ஆற்றல் 23பிஎச்பி மற்றும் டார்க் 18.3என்எம் ஆகும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்படலாம்.

தற்பொழுது விற்பனையில் உள்ள 220சிசி அவெஞ்சர் பைக் முற்றிலும் திரும்ப பெற்று கொள்ள வாய்ப்புகள் உள்ளது. புதிய அவெஞ்சர் பைக்கில் தோற்றத்தில் சில மாற்றங்களுடன் பாடி கிராஃபிக்ஸ் போன்றவற்றை பெற்றிருக்கும்.

மற்றபடி வேறு எந்த விபரங்களும் இன்னும் வெளியாகவில்லை . புதிய பஜாஜ் அவெஞ்சர் விலை சற்று கூடுதலாக இருக்கலாம்.

New Bajaj Avenger to launch October first weak