புதிய பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் வருமா ?

பஜாஜ் ஆட்டோ அவென்ஜர் க்ரூஸர் பைக்கினை மேம்படுத்தி புதிய என்ஜின் மற்றும் சிறப்பான தோற்றத்துடன் இந்த நிதி ஆண்டிற்க்குள் புதிய பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் விற்பனைக்கு வரவுள்ளது.

பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்
பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக்

அவென்ஜர் க்ருஸர் பைக் சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக தொலைவு பயணிப்பதற்க்கும் மிக குறைவான விலையில் கிடைக்கும் க்ரூஸர் பைக் ஆகும்.

வரவிருக்கும் அவென்ஜர் பைக்கில் 220சிசி என்ஜினுக்கு பதிலாக 200என்எஸ் பல்சர் பைக்கில் பொருத்தப்பட்டிருக்கும் 23.52பிஎஸ் ஆற்றலை வழங்கும் அதே என்ஜின் அவென்ஜர் பைக்கிலும் பொருத்த உள்ளனர்.

தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலுக்கும் புதிய அவென்ஜர் பைக்கிற்க்கும் பெரிதான தோற்ற மாறுதல்கள் இருக்காது. பல இடங்களில் குரோம் ஃபினிஷ் , புதிய கிராஃபிக்ஸ் போன்றவற்றை பெற்றிருக்கும்.

இந்த வருடத்தின் இறுதியில் புதிய பஜாஜ் அவென்ஜர் க்ருஸர் பைக் விற்பனைக்கு வருகின்றது.

All New Bajaj Avenger cruiser bike launch this FY15