புதிய மஹிந்திரா தார் எஸ்யுவி விற்பனைக்கு வந்தது

மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா தார் எஸ்யுவி ரூ.8.31 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. தார் எஸ்யுவி தோற்றம் மற்றும் உட்புறத்தில் மேலும் சில மாற்றங்களுடன் வந்துள்ளது.

mahindra%2Bthar

மஹிந்திரா தார் எஸ்யுவி மிக சிறப்பான ஆஃப்ரோடர் வாகனத்தில் புதிய இன்டிரியர் மற்றும் தோற்றத்தில் சில மாற்றங்கள் மெக்கானிக்கல் ரிதியாக லாக்கிங் டிஃப்ரன்ஷியல் மேம்பாடு போன்றவை செய்யப்பட்டுள்ளது.

தோற்றம்

மஹிந்திரா தார் எஸ்யுவி தோற்றத்தில் முன் மற்றும் பின்புற பம்பர்கள் உலோகத்திலிருந்து பிளாஸ்டிக் பாகங்களுக்கு மாறியுள்ளது. கருப்பு நிற கிளாடிங் , அகலமான ஃபூட் ரெஸ்ட் , மேலும் டர்ன் இன்டிகேட்டர் வீல் ஆர்ச்சில் இடம் பெற்றுள்ளது.

mahindra%2Bthar%2Bfr

மஹிந்திரா தார் எஸ்யுவி சிவப்பு , பீஜ் , வெள்ளை , கருப்பு மற்றும் சில்வர் என மொத்தம் 5 கலர்களில் கிடைக்கும்.

loading...

உட்புறம்

உட்புறத்தில் பெரிதான மாற்றங்களை கண்டுள்ளது. கருப்பு மற்றும் பீஜ் என இரட்டை வண்ணங்களை கொண்ட டேஸ்போர்டு , சென்ட்ரல் கன்சோல் மத்தியில் தார் என எழுதப்பட்டுள்ளது.

mahindra%2Bthar%2Bdashboard

mahindra%2Bthar%2Binterior

வட்ட வடிவ ஏசி வென்ட்டில் சில்வர் இன்சர்ட் , 2 டின் ஆடியோ அமைப்பு , புதிய ஸ்டீயரிங் லிவர் , ஹேண்ட் பிரேக் , கியர் நாப் போன்றவை பொலிரோவில் இருந்து பெற்றுள்ளது.

என்ஜின்

தார் எஸ்யுவி காரில் உள்ள 63எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 லிட்டர் DI என்ஜின் மற்றும் 105எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.5 CRDe என்ஜினும் பொருத்தப்பட்டிருக்கும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

mahindra%2Bthar%2Bsuv%2Brear

இந்த இரண்டு என்ஜினிலும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன் உள்ளது. மேலும் மிக குறைவான பிடிப்புள்ள சகதி மற்றும் சேற்றிலும் பயணிக்கும் பொழுது கிரிப் அதிகம் கிடைத்து சக்கரங்கள் சீராக இயங்கும் வகையில் புதிய லாக்கிங் டிஃப்ரன்ஷியல் பொருத்தியுள்ளனர்.

மஹிந்திரா தார் எஸ்யுவி விலை பட்டியல்

மஹிந்திரா தார் CRDe – ரூ.8.31,833 லட்சம்

மஹிந்திரா தார் DI  2WD – ரூ.5.31,308 லட்சம்

மஹிந்திரா தார் DI 2WD PS – ரூ.5.55,386 லட்சம்

மஹிந்திரா தார் 4WD PS – ரூ.6.07,036 லட்சம்

(Prices CRDe- ex-showroom Chennai DI- ex-showroom Tamil Nadu )

mahindra%2Bthar%2Bside

Mahindra Thar SUV facelift launched price at Rs.8.31 lakhs

loading...