புதிய மினி கூப்பர் எஸ் விற்பனைக்கு வந்தது

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் மினி பிராண்டில் புதிய மினி கூப்பர் எஸ் காரின் பெட்ரோல் என்ஜின் மாடலை மினி கார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மினி கூப்பர் எஸ்

கடந்த ஆண்டில் 3 மற்றும் 5 கதவுகள் கொண்ட டீசல் மாடலினை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்பொழுது பெட்ரோல் மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

முழுமையான கட்டமைக்கப்பட்ட மாடலாக இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ள கூப்பர் எஸ் கார்கள் 3 கதவுகள் கொண்ட மாடலில் கிடைக்கும்.

மினி கூப்பர் எஸ்

192பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 4 சிலிண்டர் கொண்ட 2.0 லிட்டர் டீவின்-டர்போ ஸ்கோரல் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 280என்எம் ஆகும். 6 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

0 முதல் 100கிமீ வேகத்தினை எட்ட வெறும் 6.7 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 233கிமீ ஆகும்,

Ads

மினி கூப்பர் எஸ் காரானது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் யூகேஎல் தளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறம் மற்றும் பின்புற சஸ்பென்ஷன்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மினி கூப்பர் எஸ் விலை ரூ.34.65 லட்சம் (ex-showroom india)

மினி கூப்பர் எஸ்

Comments