புதிய மெக்லாரன் 675எல்டி கார் அறிமுகம்

மெக்லாரன் 675எல்டி மிகவும் சக்திவாய்ந்த சூப்பர் ஸ்போர்ட்ஸ் காராகும். வரும் ஜெனிவா மோட்டார் ஷோவில் பார்வைக்கு வைக்கப்பட உள்ள நிலையில் புதிய மெக்லாரன் 675எல்டி காரின் விவரங்கள் வெளிவந்துள்ளது.

மெக்லாரன் 675எல்டி கார்

மிக இலகுவான எடையை கொண்டுள்ள மெக்லாரன் 675எல்டி காரானது முற்றிலும் கார்பன் ஃபைபரால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இலகுவான எடையை கொண்டிருக்கும் நோக்கில் அடிச்சட்டம் , எஞ்சின் , போன்றவை இலகுவான எடை மற்றும் அதிக வலுவினை கொண்ட பாகங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

மெக்லாரன் 675எல்டி கார்

சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த டீவின் டர்போ 3.8 லிட்டர் வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 666பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்கு விசை 700என்எம் ஆகும். 7 வேக இரட்டை கிளட்சுகளை கொண்ட தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மெக்லாரன் 675எல்டி கார்

0-100கிமீ வேகத்தினை வெறும் 2.9 விநாடிகளில் எட்டிவிடும். மெக்லாரன் 675எல்டி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 330கிமீ ஆகும்.

ads

மிக சிறப்பான ஏரோடைனமிக்ஸ் நுட்பத்தினால் 675எல்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. முந்தைய 650எஸ் காரை விட சிறப்பான முறையில் டைனமிக்ஸ் வடிவத்தினை கொண்டுள்ளது. எல்டி என்றால் லாங் டெயில் (Long Tail) கூடுதலான வால் பகுதியை கொண்ட மெக்லாரன் காராகும்.

மெக்லாரன் 675எல்டி கார் இன்டிரியர்

675எல்டி ஸ்போர்ட்ஸ் காரில் மிக நேர்த்தியான முகப்பு விளக்குகள், பகல் நேர விளக்குகள் , கதவுகளில் மிக பெரிய காற்று செல்லும் பாதையை கொண்டுள்ளது. பின்புறத்தில் உள்ள பின்புற இறக்கைளின் கீழ் வட்ட வடிவ இரட்டை புகைபோக்கிகளை கொண்டுள்ளது.

மெக்லாரன் 675எல்டி ரியர்

உட்புறத்தில் மிக நேர்த்தியான டேஸ்போர்டு கருப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களை கொண்டு வடிவமைத்துள்ளனர். மேலும் பக்கெட் இருக்கைகளை கொண்டுள்ளது.

மெக்லாரன் 675எல்டி கார்
McLaren 675LT will debut at Geneva motor show 2015

Comments