புதிய ரெனோ டஸ்ட்டர் விற்பனைக்கு வந்தது

ரெனோ டஸ்ட்டர் காரின் மேம்படுத்தப்பட்ட டஸ்ட்டர் எஸ்யூவி காரில் பல கூடுதல் வசதிகளை இணைத்து புதிய தலைமுறை ரெனோ டஸ்ட்டர் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரெனோ டஸ்ட்டர்

வெளிதோற்றத்தில் பெரிதாக எவ்வித மாற்றமும் இல்லாமல் உட்பறத்தில் பல நவீன வசதிகளை இணைக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய மாடலை விட ஆற்றலில் மாற்றம் இல்லாமல் எரிபொருள் சிக்கனத்தினை மேம்படுத்தியுள்ளனர்.

உட்ப்பறத்தில் புதிய இன்ஸ்டூரூமென்ட் கிளஸ்ட்டர் , க்ரூஸ் கன்ட்ரோல் , ஸ்பீடு லிமிட்டர், புதிய ஸ்டீயரிங் கேலாம் , வேகத்தினை அறிந்து கதவுகளை லாக செய்ய உதவும் சென்சார் , புதிய அப்ல்சரி , மற்றும் சாஃப்ட் டச் டேஸ்போர்டு போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது.

இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி, பிரேக் அசிஸ்ட், பின்புற வைப்பர் மற்றும் வாசர் , ஓட்டுநர் இருக்கையை 8 வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம்,

Videos

எரிபொருள் இருப்பினை நிகழ்நேரத்தில் உள்ளதை கான்பிக்கும் வசதி , ஆடியோ மற்றும் அலைபேசி கட்டுப்பாடு சுவிட்சுகள் ஸ்டீயரீயங் வீலில் இருக்கும்.

புதிய ஈக்கோ மோட் மூலம் சிறப்பான மைலேஜ் கிடைக்கும். முந்தைய மாடலை விட 10 % வரை எரிபொருள் சிக்கனத்தினை அதிகரித்துள்ளனர்.

1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 103பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்கு விசை 148என்எம் ஆகும். பெட்ரோல் மைலேஜ் லிட்டருக்கு 13.4கிமீ ஆகும்.

1.5 லிட்டர் டீசல் என்ஜின் இரண்டு விதமான ஆற்றல்களில் கிடைக்கின்றது. அவை 85பிஎச்பி மற்றும் 105.8பிஎச்பி ஆகும். 85பிஎச்பி ஆற்றல் வெளிப்படுத்தக்கூடிய மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 19.87கிமீ ஆகும்.

105.8பிஎச்பி ஆற்றல் வெளிப்படுத்தக்கூடிய மாடலின் மைலேஜ் லிட்டருக்கு 19.64கிமீ ஆகும்.

புதிய ரெனோ டஸ்ட்டர் தொடக்க விலை ரூ.8.30 லட்சம் ஆகும்.(ex-showroom, Delhi)

Comments