புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் செப்டம்பர் 1 முதல்

வெஸ்பா ஸ்கூட்டரின் VX மாடல் மற்றும் வெஸ்பா S மாடலில் புதிய  VXL மற்றும் SXL வேரியண்ட் ஸ்கூட்டர்கள் வரும் செப்டம்பர் 1ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.

vespa+scooter+color

கிளாசிக் தோற்றத்தில் விளங்கும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் நல்ல வரவேற்பினை பெற்று சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது.

loading...

தற்பொழுது விற்பனையில் உள்ள வெஸ்பா  LX 125, VX 125, வெஸ்பா S மற்றும் எலகன்ட் மாடல்களில் 10பிஎச்பி ஆற்றலை அளிக்கும் 125சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்கு விசை 10.6 என்எம் ஆகும்.

இதே என்ஜின் தான்  VXL மற்றும் SXL வேரியண்ட் ஸ்கூட்டர்களில் பொருத்தப்பட்டிருக்கும்.

கடந்த இந்தியன் பைக் வாரத்தில் பார்வைக்கு வந்த பெர்ஃபாமென்ஸ் ரக வெஸ்பா ஜிடிஎஸ் 300 ஸ்கூட்டரும் விற்பனைக்கு கொண்டு வரலாம் என தெரிகின்றது. 21.1பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 278சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 22.3என்எம் ஆகும். இதில் சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

வரும் செப்டம்பர் 1ந் தேதி புதிய வெஸ்பா ஸ்கூட்டர்கள் அறிமுகத்திற்கு உலக புகழ்பெற்ற கால்பந்து வீரர்  அலெக்சாண்ட்ரோ டெல் பியரோ வருகை தரவுள்ளார்.

New Vespa Scooter to launch on Sep 1 , 2015

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin