புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் எப்பொழுது

புதிய தலைமுறை ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்களை உருவாக்க மாருதி சுசூகி முயற்சியை தொடங்கி உள்ளது. புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் முற்றிலும் நவீன அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு தரத்தினை பெற்று விளங்கும்.

டிசையர் கார்

வரும் 2018ம் நிதி ஆண்டில் இந்த புதிய ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய அம்சங்களுடன் உருவாக்கப்பட உள்ளதை மாருதி சுசூகி உறுதி செய்துள்ளது.

புதிய ஸ்போர்ட்டிவ் தோற்றம் , சிறப்பான நவீன வசதிகள் , பாதுகாப்பு அம்சங்கள் என அனைத்திலும் பிரிமியம் தன்மைக்கு ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் கார்கள் உயரவுள்ளது. மேலும் இந்திய பாதுகாப்பு தர கிராஷ் டெஸ்ட் சோதனைகள் 2017ம் ஆண்டின் இறுதிமுதல் தொடங்க உள்ளதால் அதற்க்கு ஈடுகொடுக்கும் வகையிலும் இந்த கார்கள் உருவாக்கப்படும்.

மேலும் புதிய 1.4 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 1.5 லிட்டர் சுசூகி டீசல் என்ஜின் போன்றவை பொருத்த வாய்ப்புகள் உள்ளதாம் இந்த என்ஜின்கள் சிறப்பான மைலேஜ் மற்றும் செயல்திறனை வெளிப்படுத்தும்.

ads

All New Generation Maruti Swift and Dzire  to be launch FY-2018

Comments