புதிய ஹூண்டாய் வெர்னா 4எஸ் விற்பனைக்கு வந்தது

ஹூண்டாய் வெர்னா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் ரூ.7.74 லட்சத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய வெர்னா காரை ஹூண்டாய் வெர்னா 4எஸ் என அழைக்கப்படுகின்றது.

ஹூண்டாய் வெர்னா 4எஸ்

4 S என்றால் Style, Safety, Sophistication மற்றும் Speed.

வெளிதோற்றத்தில் பல மாற்றங்களை கண்டுள்ள வெர்னா 4எஸ் உட்ப்புறத்தில் பெரிதான மாற்றங்கள் இல்லை. மேலும் என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை. பின்புற சஸ்பென்ஷம் மற்றும் டீசல் என்ஜினில் எரிபொருள் சிக்கனத்திற்க்கு சிறிய மாற்றத்தை பெற்றுள்ளது.

முகப்பு தோற்றத்தில் புதிய பம்பர்,  கீரில் மற்றும் முகப்பு விளக்குகளில் மாறுதல் பெற்றுள்ளன. மேலும் எஸ்கார்ட் விளக்கு (ஃபாலோ மீ ஹோம்) அழகான பனி விளக்குகளை கொண்டுள்ளது.

Ads

16 இஞ்ச் டைமன்ட் கட் ஆலாய் வீல் பயன்படுத்தியுள்ளனர். மேலும் பின்புற விளக்குகளில் எல்இடி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பை விட ஏரோடைனமிக்ஸ் மேம்படுத்தியுள்ளனர்.

உட்ப்பறத்தில் 1ஜிபி வரை பாடல்களை சேமிக்கும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்கோ லிவர் என்ற பெயரில் ஸ்டீயரிங் அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

ஹூண்டாய் வெர்னா 4எஸ்

வெர்னா 4எஸ் காரில் இரண்டு விதமான பெட்ரோல் என்ஜின் மாடலில் கிடைக்கும். அவை 105பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 121பிஎச்பி ஆற்றலை தரவல்லதாகும். 6 வேக மெனுவல் மற்றும் 4 வேக தானியங்கி என இரண்டிலும் கிடைக்கும்.

வெர்னா 4எஸ் டீசல் காரிலும் இரண்டு விதமான என்ஜின் மாடலில் கிடைக்கும். அவை 89பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.4 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 126பிஎச்பி ஆற்றலை தரவல்லதாகும். 6 வேக மெனுவல் மற்றும் 4 வேக தானியங்கி என இரண்டிலும் கிடைக்கும்.

ஏபிஎஸ், இபிடி போன்ற பாதுகாப்பு அம்சங்கள் அனைத்து மாடல்களிலும் கிடைக்கும். 6 காற்றுப்பைகள் டாப் மாடலில் மட்டும் கிடைக்கும்.

ஹூண்டாய் வெர்னா 4எஸ்

ஹூண்டாய் வெர்னா 4ஸ் கார் விலை

பெட்ரோல் மாடல்

1.4 லிட்டர் விடிவி – ரூ.7.74 லட்சம்

1.6 லிட்டர் விடிவிடி எஸ் – ரூ. 8.85 லட்சம்

1.6 லிட்டர் விடிவிடி எஸ் (ஆப்ஷனல்) – ரூ.9.38 லட்சம்

1.6 லிட்டர் விடிவிடி எஸ் (ஆட்டோ) – ரூ.10.11லட்சம்

1.6 லிட்டர் விடிவிடி எஸ்எக்ஸ் – ரூ.10.15லட்சம்

டீசல் மாடல்

1.4 லிட்டர் சிஆர்டிஐ – ரூ.8.95 லட்சம்

1.6 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி எஸ் – ரூ. 10 லட்சம்

1.6 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி எஸ் (ஆப்ஷனல்) – ரூ. 10.59 லட்சம்

1.6 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி எஸ்எக்ஸ் – ரூ. 11.46 லட்சம்
1.6 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி எஸ்எக்ஸ்  (ஆட்டோ) – ரூ. 12.20 லட்சம்

(ex-showroom delhi)

Comments