பெனெல்லி பைக்கில் இந்தோனேசியா முதல் இத்தாலி வரை

இந்தோனேசியா முதல் இத்தாலி வரை பெனெல்லி TNT600i பைக்கில் சுமார் 14 நாடுகளை 6 மாத கால அளவில் பயணிக்கும் முயற்சியில் இந்தியாவினை வந்தடைந்துள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த மெரியோ இராத் இவரின் இலக்கு இத்தாலியின் பெனெல்லி தொழிற்சாலை ஆகும்.

beneli%2Btnt600i%2Brider

தற்பொழுது இந்தியா வந்தடைந்துள்ள மெரியோ இராத் அடுத்த பாகிஸ்தான் செல்ல உள்ளார் . அதனை தொடர்ந்து இரான் மற்றும் பலுசிஸ்தானின் வழியாக ஐரோப்பாவில் நுழைந்து பெனெல்லி தொழிற்சாலைக்கு அக்டோபர் இறுதியில் சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

loading...

இதுபற்றி மெரியோ இராத் கூறுகையில் இந்த பயணத்தினை நிறைவாக முடிக்கும்பொழுது என்னுடைய பயண முடிவு மிக சிறப்பானதாக அமையும் என்பதில் நம்பிக்கை பெற்றிருப்பேன். மிக சிறப்பான என்னுடைய பாட்னருடன் (பைக்) உதவியுடன் பைக் பிறந்த இடத்திற்க்கு  செல்வதே என் இலக்கு என தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க ; பெனெல்லி பைக்குகள் விபரம்

பெனெல்லி பைக்குகள் மிக வேகமாக இந்திய சந்தையில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. இந்தியாவிற்க்கு வந்த மூன்று மாதங்களிலே பெங்களூரு மற்றும் புனே நகரங்களில் 100 பைக்குளை விற்பனை செய்துள்ளது.

Mario Iroth takes his Benelli TNT 600i From Indonesia to Italy

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin