பென்ட்லி பென்டைகா ; உலகின் மிக வேகமான எஸ்யூவி

பென்ட்லி நிறுவனத்தின் பென்டைகா சொகுசு எஸ்யூவி காரின் சோதனை ஓட்டத்தின் பொழுது மணிக்கு 301கிமீ வேகத்தினை பதிவு செய்து உலகின் மிக வேகமான எஸ்யூவி என்ற பெயரினை பெற்றுள்ளது.

பென்ட்லி பென்டைகா
பென்ட்லி பென்டைகா

வரும் 15ந் தேதி தொடங்க உள்ள பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள பென்டைகா எஸ்யூவி கார் வெளியிட்டுள்ள டீஸர் வீடியோவில் இதனை பதிவு செய்துள்ளது.
பென்ட்லீ பென்டைகா காரில் 600எச்பி ஆற்றலுக்கு மேல் வெளிப்படுத்தும்  W12 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 900என்எம் டார்க் வெளிப்படுத்தும்.

மற்ற பிரபலமான எஸ்யூவி போர்ஷே கேமேன் டர்போ எஸ் வேகம் மணிக்கு 281கிமீ ஆகும். ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் SVR காரின் வேகம் மணிக்கு 261கிமீ ஆகும்.

       

Bentley Bentayga : The World’s Fastest SUV