பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

உலகின் மிக வேகமான மற்றும் அதிக விலை கொண்ட சொகுசு எஸ்யூவி காராக விளங்கும் பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி கார் ரூ.3.85 கோடி விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

bentley-bentayga

4 இருக்கைகளை கொண்ட விலை உயர்ந்த சொகுசு பென்டைகா எஸ்யூவி காரில் பல விதமான நவீன சொகுசு வசதிகள் மற்றும் ஆஃப்ரோடு மற்றும் ஆன்ரோடு அனுபவத்தினை மிக சிறப்பான முறையில் பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பென்டைகா எஸ்யூவி காரில் 600hp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய சக்திவாய்ந்த W12 ட்வின் டர்போசார்ஜ்டு 6.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 900Nm ஆகும். இதில் 8 வேக ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பென்ட்லீ பென்டைகா எஸ்யூவி காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 301கிமீ ஆகும். 0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.1 விநாடிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளும்.

8 இஞ்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 60ஜிபி ஹார்ட் டிரைவ் சேமிப்பகத்தை பெற்றுள்ளது. மேலும் 10.2 இஞ்ச் அகலம் கொண்ட பென்ட்லி ஆன்ட்ராய்டு டேப்லெட் பொருத்தியுள்ளனர் . இதனை தேவைப்படும் பொழுது தனியாக எடுத்து கொள்ள முடியும்.

RGB HIGH RES

2016-Bentley-Bentayga-Rear-Seat

2016 ஆம் ஆண்டிற்கு இந்தியாவிற்கு 20 கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. 20 பென்டைகா கார்களும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாம்.

Comments

loading...