போர்ஷே மசான் எஸ்யூவி 2 லிட்டர் பெட்ரோல் அறிமுகம்

போர்ஷே மசான் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மாடல் ரூ.76.84 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் ஸ்டைலுடன் நேர்த்தியான மாடலாக மசான் எஸ்யூவி விளங்குகின்றது.

 

porsche-Macan-1024x683 போர்ஷே மசான் எஸ்யூவி 2 லிட்டர் பெட்ரோல் அறிமுகம்

252 குதிரைதிறனை வெளிப்படுத்தக்கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 370Nm ஆகும். இதில் 7 வேக PDK ஆட்டோ கியர்பாக்ஸ் மூலம் ஆற்றலை 4 வீல்களுக்கு கடத்துகின்றது.  0 முதல் 100 கிமீ வேகத்தினை எட்ட 6.7 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். மசான் எஸ்யூவி உச்ச வேகம் மணிக்கு 229 கிமீ ஆகும்.

மேலும் இந்தியாவில் 244 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.0 லிட்டர் S டீசல் வேரியண்ட் மற்றும் 400 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 3.6 லிட்டர் பை டர்போ பெட்ரோல் என்ஜின் என தற்பொழுது மொத்தம் 3 வேரியண்ட்கள் இந்தியாவில் கிடைக்கின்றது.

2015-Porsche-Macan-suv-Interiors-1024x687 போர்ஷே மசான் எஸ்யூவி 2 லிட்டர் பெட்ரோல் அறிமுகம்

 

நேரடியான போட்டியாளர்கள் மசான் எஸ்யூவி காருக்கு இல்லை என்றாலும் பிஎம்டபுள்யூ எக்ஸ்3 , மெர்சிடிஸ் GLE போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமையும். 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் போர்ஷே மசான் விலை ரூ.76.84 லட்சம் (எக்ஸ்ஷோரூம்  ) ஆகும்.

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin