மஸராட்டி கார்கள் விற்பனைக்கு வந்தது

இத்தாலியின் மஸராட்டி ஸ்போர்ட்ஸ் கார்கள் இந்திய சந்தையில் மீண்டும் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிப்லை, குவாட்ரோபோர்ட்டே , கிரான் டூரீஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ ஆகிய கார்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

granturismo%2Bsport
மஸராட்டி கிரான் டூரீஷ்மோ ஸ்போர்ட்

மஸராட்டி ஜிப்லை மற்றும் மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே  கார்களில் 275பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3.0 லிட்டர் வி6 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

loading...

மஸராட்டி குவாட்ரோபோர்ட்டே GTS காரில் 530எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 3.8 லிட்டர் ட்வீன் டர்போ பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.

கிரான் டூரீஷ்மோ மற்றும் கிரான் கேப்ரியோ கார்களில் 405பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

மஸராட்டி கார் விலை பட்டியல்

ஜிப்லை – ரூ. 1.1 கோடி

குவாட்ரோபோர்ட்டே – ரூ.1.5 கோடி

குவாட்ரோபோர்ட்டே GTS – ரூ. 2.2 கோடி

கிரான் டூரீஷ்மோ – ரூ.1.8 கோடி

கிரான் கேப்ரியோ – ரூ.2.0 கோடி

Maserati officially returns to India market

loading...