மஹிந்திரா ஆஃப்ரோடு பயற்சி முகாம்

மஹிந்திரா நிறுவனம் ஆஃப் ரோடு வாகன பயற்சிக்கு முன்பதிவு தொடங்கியுள்ளது. மஹிந்திராவின் இந்த ஆஃப் ரோடு வாகனங்களுக்கான பயற்சி முகாமில் இருவிதமான பிரிவில் பயற்சி வழங்கப்படும். அதாவது தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கு ‘டர்ட்டி கோர்ஸ்’ மற்றும் அட்வான்ஸ்டு புதியவர்களுக்கு ‘ட்ரெயில் சர்வைவர்’ .

பயற்சி நடைபெறும் இடம் ; இகாத்ப்புரி மலை பிரதேசம்(மும்பையில் இருந்து 120 கீமி மற்றும் நாசிக்கில் இருந்து 40கீமி தூரம்)
மஹிந்திரா தார் வாகனத்தை மஹிந்திராவே பயற்சிக்கு அளிக்கும்.
பயற்சி காலம்; 10 மணி நேரம் ஆகும். இரண்டு நாட்களில் பயற்சி நடைபெறும். மதியத்துக்கு மேல் நடைபெறும்.
இந்த பயற்சியில் ஆஃப்ரோடு விவரங்கள், 4 வீல் டிரைவ் கோட்பாடுகள், பாதுகாப்பு அம்சங்கள், மேலும் 3 வகுப்புகள் நடைபெறும் இறுதியாக தேர்வு நடத்தப்படும் கேள்வி மற்றும் பதில் முறையில் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.
பயற்சி முகாம் நாட்கள்.
ஏப்ரல 20 மற்றும் 21..

Comments