மஹிந்திரா இ வெரிட்டோ ஜூன் 2 முதல்

டீசல் வாகனங்களின் தடை எதிரொலி காரணமாக பெட்ரோல் மற்றும் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்து வருகின்றது. நாளை அதாவது  ஜூன் 2 , 2016யில் மஹிந்திரா இ வெரிட்டோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

mahindra-e-verito மஹிந்திரா இ வெரிட்டோ ஜூன் 2 முதல்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட மின்சார காராக காட்சிப்படுத்தப்பட்ட வெரிட்டோ செடான் காரின் இ வெரிட்டோ மாடலில் 72 வோல்ட் 3 முனை இன்டக்‌ஷன் ஏசி மோட்டாரினை பெற்றுள்ளது.

41 hp திறன் மற்றும்  91 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் வகையில் இதன் செயல்திறன் அமைந்திருக்கும். சாதரன வெரிட்டோ காரின் தோற்றத்தினை பெற்றுள்ள இவெரிட்டோ காரில் எவ்விதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை.

இதன் உச்ச வேகம் மணிக்கு 85 கிமீ வரை எட்டவல்லதாகும். ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 முதல் 100 கிமீ வரை பயணிக்க இயலும். முழுதாக சார்ஜ் ஏற 7 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். டீசல் டாக்சி மற்றும் கேப் , தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள eவெரிட்டோ டாக்சி சந்தைக்கு ஏற்ற மாடலாக விளங்கும்.

 

mahindra-everito மஹிந்திரா இ வெரிட்டோ ஜூன் 2 முதல்

இந்திய அரசின் FAME  (Faster Adoption and Manufacturing of Electric Vehicles in India) திட்டத்தின் கீழ் சலுகை பெறும் என்பதனால் 7.50 லட்சம் விலையில் கிடைக்கலாம். மஹிந்திரா ரேவா e20 காரினை தொடர்ந்து 2வது மாடலாக இவெரிட்டோ வரவுள்ளது.

 

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin