மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஃபேஸ்லிஃப்ட் விரைவில்

மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விரைவில் விற்பனைக்கு வருவது உறுதியாகியுள்ளது. தீவரமான சோதனை ஓட்டத்தில் புதிய எக்ஸ்யூவி500 கார் உள்ளது.

Mahindra%2BXUV500%2Bfacelift%2Bfront மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஃபேஸ்லிஃப்ட் விரைவில்

புதிய எக்ஸ்யூவி500 காரின் முகப்பு முன்பை விட மிகவும் ஸ்போர்டிவான தோற்றத்தினை பெற்றுள்ளது. மேலும் முகப்பு விளக்குகள் இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.  மேலும் பகல் நேர எல்இடி விளக்குகளும் பொருத்தப்பட்டிருக்கும்.

முகப்பு கிரிலில் சில மாற்றங்களை கண்டுள்ளது. “L” வடிவ குரோம் பூச்சு ஸ்லாட் அவற்றிலே பனி விளக்குகளை கொண்டிருக்கின்றது. பக்கவாட்டில் 10 ஸ்போக்களை கொண்ட புதிய ஆலாய் வீல் பெற்றுள்ளது. மேலும் பின்புறத்தில் மாற்றங்கள் இல்லை.

Mahindra%2BXUV500%2Bfacelift மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஃபேஸ்லிஃப்ட் விரைவில்

140பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. என்ஜினில் மாற்றங்கள் இல்லை மேலும் உட்புறத்திலும் பெரிதாக மாற்றங்கள் இருக்காது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் மே மாதம் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகின்றது.

Mahindra%2BXUV500%2Bfacelift%2Brear மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஃபேஸ்லிஃப்ட் விரைவில்

spyshotos from : autocarindia

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin