மஹிந்திரா எலக்ட்ரிக் வெரிட்டோ கார் விபரம்

மஹிந்திரா எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மிகுந்த முக்கியத்ததுவம் கொடுத்து வருகின்றது. அந்த வரிசையில் மஹிந்திரா ரேவா e2o கார் E-மேக்சிமோ தொடர்ந்து எலக்ட்ரிக் வெரிட்டோ செடான் காரை களமிறக்க உள்ளது.

Mahindra%2BVerito%2Belectric மஹிந்திரா எலக்ட்ரிக் வெரிட்டோ கார் விபரம்

கடந்த 2012 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்த எலக்ட்ரிக் வெரிட்டோ செடான் தற்பொழுது உற்பத்தி நிலையை எட்டியுள்ளது. ஆனாலும் மத்திய அரசிடமிருந்து எலக்ட்ரிக் வாகனங்களுக்கு பெரிதான சலுகைகள் அளிக்கவில்லை என்பதால் விற்பனைக்கு வருவதனை தள்ளி வைத்துள்ளது.

மஹிந்திரா ரேவா e2o காரில் உள்ள நுட்பத்தினை எல்க்ட்ரிக் வெரிட்டோ காரிலும் பயன்படுத்தியுள்ளனர். லித்தியம்-ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏறுவதற்க்கு 7 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

முழுமையான சார்ஜில் 80கிமீ வரை பயணிக்கு முடியும். இதன் உச்சகட்ட வேகம் மணிக்கு 85கிமீ ஆகும்.

முதல் லாட்டில் தயாரிக்கப்பட்ட 5 எலக்ட்ரிக் வெரிட்டோ கார்களை பெல் நிறுவனத்துக்கு வழங்க உள்ளனர். வரும் டெல்லி ஆட்டோ கண்காட்சியில் எல்க்ட்ரிக் வெரிட்டோ முறைப்படி விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.

Mahindra Electric Verito coming soon

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin