மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் எடிசன் அறிமுகம்

மஹிந்திரா கேயுவி100 மினி எஸ்யூவி காரின் சிறப்பு எக்ஸ்புளோர் எடிசன் ரூ.50,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேயூவி100 எக்ஸ்புளோர் எடிசனில் கூடுதல் துனைகருவிகள் டீலர்கள் வாயிலாக பொருத்தி தரப்பட உள்ளது.

mahindra-kuv100-explorer மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் எடிசன் அறிமுகம்

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ வாயிலாக காட்சிக்கு வந்த மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் பதிப்பில் என்ஜினில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கேயுவி100 எஸ்யுவி காரில் 82 bhp @ 5500 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கன் G80 பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 115 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

77 bhp ஆற்றலை வழங்கும் 1198cc எம் ஃபால்கன் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100  எஸ்யூவி காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

5 மற்றும் 6 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கின்ற கேயூவி100 எஸ்யுவி காரில் ஏபிஎஸ் , இபிடி முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் போன்றவை அனைத்து விதமான வேரியண்ட்களிலும் பெற்றுள்ளது.

mahindra-kuv100-explorer-fr மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் எடிசன் அறிமுகம்

கேயூவி100 எக்ஸ்புளோர் எடிசன்

சாதரன வேரியண்டில் இருந்து வித்தியாசப்படும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ள அம்சங்களை பெற்றுள்ள எக்ஸ்புளோர் பதிப்பில் முன் மற்றும் பின் பம்பர்களில் சில்வர் வண்ண எக்ஸ்புளோர் கிளாடிங் , பக்கவாட்டில் , மேற்கூறையில் உள்ள ரூஃப் ரெயில் போற்றவற்றிலும் சில்வர் வண்ணத்தினை பெற்றுள்ளது. முகப்பு விளக்கில் எக்ஸ்புளோர் பேட்ஜ் ,  ஸ்பிளிட்டே பிரேக் லைட் , ரியர் ஸ்பாய்லர் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.

உட்புறத்தில் பிளாக் லெதர் இருக்கைகள் போன்றவற்றுடன் ஆரஞ்சு வண்ணம் கலந்துள்ளது. சிறப்பான ஸ்டைலிங் அம்சங்களை பெற்று அசத்தலாக காட்சியளிக்கும் மஹிந்திரா கேயுவி100 விலை ரூ. 4.65 லட்சம் முதல் ரூ.7.23 லட்சம் வரை கிடைக்கின்றது.

மஹிந்திரா கேயூவி100 எக்ஸ்புளோர் பதிப்பில் கூடுதலாக இந்த வசதிகளை பெற ரூ.50,000 செலுத்த வேண்டும்.

mahindra-kuv100-explorer-front மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் எடிசன் அறிமுகம்

mahindra-kuv100-explorer-rear மஹிந்திரா கேயுவி100 எக்ஸ்புளோர் எடிசன் அறிமுகம்

loading...
1 Shares
Share
Tweet
+11
Pin