மஹிந்திரா சுப்ரோ வேன் விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா சுப்ரோ மினி வேன் ரூ.4.38 லட்ச தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மஹிந்திரா சுப்ரோ மினி வேன் 8 இருக்கைகள் கொண்டதாகும்.

mahindra-supro-series-launched மஹிந்திரா சுப்ரோ வேன் விற்பனைக்கு வந்தது
மஹிந்திரா சுப்ரோ வேன்  மற்றும் மேக்சி டிரக்

எம்பிவி கார்களை போன்று அமைந்துள்ள சுப்ரோ மினி வேன் மூன்று விதமான வேரியண்டில் 5 மற்றும் 8 இருக்கைகள் என இரண்டு விதமான இருக்கை அமைப்பில் கிடைக்கின்றது.

45 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 909சிசி டர்போ டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 98என்எம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா சுப்ரோ வேன்  பவர் மற்றும் ஈக்கோ என இரண்டு மோட்களை பெற்றுள்ளது. மஹிந்திரா சுப்ரோ வேன் மைலேஜ் லிட்டருக்கு 23.5கிமீ ஆகும்.

mahindra-supro-van-dashboard மஹிந்திரா சுப்ரோ வேன் விற்பனைக்கு வந்தது

LX , VX மற்றும் ZX என மூன்று விதமான வேரியண்டில் வந்துள்ள சுப்ரோ வேனில் LX  வேரியண்டில் மெனுவல் ஸ்டீயரிங்,  VX வேரியண்டில் பவர் ஸ்டீயரிங் மற்றும் ZX வேரியண்டில் பவர் ஸ்டீயரிங் மற்றும் ஏசி உள்ளது. வெள்ளை , கிரே மற்றும் நீலம் என மூன்று விதமான வண்ணங்களில் மஹிந்திரா சுப்ரோ வேன் கிடைக்கும்.

மாருதி ஆம்னி மற்றும் ஈக்கோ போன்ற மினி வேன்களுக்கு மஹிந்திரா சுப்ரோ போட்டியாக அமைந்துள்ளது. பெரிய குடும்பங்கள் மற்றும் டூர் மற்றும் டிராவல்ஸ் பிரிவுக்கு ஏற்ற வாகனமாக விளங்கும்.

மேலும் படிக்க ; மஹிந்திரா சுப்ரோ மேக்ஸி மினி டிரக் முழுவிபரம்

மஹிந்திரா சுப்ரோ மினி வேன் தொடக்க விலை ரூ.4.38 லட்சம் (எக்ஸ்ஷோரூம் தானே )

mahindra-supro-van1 மஹிந்திரா சுப்ரோ வேன் விற்பனைக்கு வந்தது

mahindra-supro-van மஹிந்திரா சுப்ரோ வேன் விற்பனைக்கு வந்தது
Mahindra Supro Van launched
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin