மஹிந்திரா செஞ்சூரோ புதிய வேரியண்ட் அறிமுகம்

மஹிந்திரா செஞ்சுரோ பைக்கில் புதிதாக டிஸ்க் பிரேக் வேரியண்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பல நவீன வசதிகளை கொண்ட மஹிந்திரா செஞ்சுரோ பைக்கில் மொத்தம் 5 வேரியண்ட்கள் உள்ளது.

mahindra%2Bcenturo

இருசக்கர வாகனங்களில் பல நவீன வசதிகளை அறிமுகப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வரும் மஹிந்திரா கடந்த 2013ம் வருடத்தில் மஹிந்திரா செஞ்சூரோ பைக்கினை அறிமுகம் செய்தது.

loading...

மஹிந்திரா செஞ்சூரோ பைக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டிஸ்க் பிரேக் வேரியண்ட் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

செஞ்சூரோ பைக்கில் கீயில் சின்ன விளக்கு, இரவில் வாகனத்தை பார்க்கிங் செய்துவிட்டு நகரும் பொழுது சிறிய தூரத்துக்கான பாதை காட்டும் விளக்குகள் (Guide Me Home Lamp), மற்றும் இருளான இடங்களில் பார்க்கிங் செய்திருந்தால் வாகனத்தினை எளிதாக கண்டுபிடிக்க விளக்குகள்(Find Me Lamp) போன்ற வசதிகள் உள்ளன.

செஞ்சூரோவில் 106.7சிசி MCi-5 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இதன் ஆற்றல் 8.5 எச்பி மற்றும் 8.5 என்எம் டார்க் ஆகும்.

மஹிந்திரா செஞ்சூரோ பைக் விலை (EX-showroom Tamilnadu)

செஞ்சூரோ Disk Brake: 51,710
செஞ்சூரோ O1: 51,510
செஞ்சூரோ N1: 48,610
செஞ்சூரோ Rockstar: 45,710
செஞ்சூரோ Rockstar Kick Alloy: 43,410

Mahindra Centuro gets new disc brake variant

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin