மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் ரூ.7,13 லட்சத்திலான தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மஹிந்திரா டியூவி300 மெனுவல் மற்றும் ஏஎம்டி ஆப்ஷனிலும் வந்துள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி

சவாலான விலையுடன் மற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் கம்பீரத்துடன் மஹிந்திராவின் பாரம்பரியத்தில் அசல் எஸ்யூவியாக விளங்குகின்றது.

தோற்றம்

போர் டாங்கியின் வடிவத்தின் தாத்பரியங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள டியூவி300 எஸ்யூவி கார் தோற்றம் பாக்ஸ் டைப்பில் அமைந்திருந்தாலும் சிறப்பான ஈர்ப்பினை பெற்றுள்ளது. முகப்பில் மஹிந்திராவின் பாரம்பரிய கிரிலுடன் கம்பீரமாக விளங்குகின்றது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி
ads

பக்கவாட்டில் ஸ்டைலிங்கான கோடுகளுடன் ஸ்போர்ட்டிவ் தோற்றத்துடன் கூடிய அலாய் வீலுடன் விளங்குகின்றது. பின்புறத்தில் ஸ்பேர் வீலுடன் 4 மீட்டருக்குள் கம்பீரமான எஸ்யூவி காராக காட்சியளிக்கின்றது.

இன்டிரியர்

இரட்டை வண்ண தோற்றத்தில் பிரிமியம் தோற்றத்துடன் விளங்கும் டியூவி300 காரில் 2 டின் ஆடியோ சிஸ்டம் , பூளூடூத் , யூஎஸ்பி , ஆக்ஸ் , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ மற்றும் போன் கட்டுப்பாடு என பல விதமான வசதிகளை பெற்றுள்ளது,

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி

5+2 என மொத்தம் 7 இருக்கைகளுடன் விளங்கும் டியூவி300 எஸ்யூவி காரின் பின்புற இரண்டு இருக்கையில் குழந்தைகள் அமரலாம். பூட் ஸ்பேஸ் 384 லிட்டர் கொள்ளளவும் பின்புற இருக்கைகளை மடக்கினால் 720 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ஸ் பேஸ் கிடைக்கும்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி

என்ஜின்

84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் எம் ஹாக்80 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனில் கிடைக்கின்றது.

ஸ்கார்ப்பியோ காரில் உள்ளதை போன்ற மைக்ரோ ஹைபிரிட் நுடப்ம் டியூவி300 காரிலும் உள்ளது. இந்த நுட்பத்தின் மூலம் மிக சிறப்பான எரிபொருள் சிக்கனத்தினை பெற இயலும். மஹிந்திரா டியூவி300 கார் மைலேஜ் லிட்டருக்கு 18.49 கிமீ ஆகும்.

பாதுகாப்பு வசதிகள்

டி4 பேஸ் மாடலை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்டிலும் காற்றுப்பைகள் , ஏபிஎஸ் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி விலை விபரம் ( சென்னை எக்ஸ்ஷோரூம் )

  • TUV300 T4 :  ரூ.7.13 லட்சம்
  • TUV300 T4+ : ரூ.7.49 லட்சம்
  • TUV300 T6 : ரூ.7.79 லட்சம்
  • TUV300 T6+ : ரூ.8.05 லட்சம்
  • TUV300 T6+ AMT: ரூ.8.78 லட்சம்
  • TUV300 T8: ரூ.8.66 லட்சம்
  • TUV300 T8 AMT : ரூ.9.39 லட்சம்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி
மஹிந்திரா டியூவி300

Mahindra TUV300 SUV launched 

Comments