மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி – கார் விமர்சனம்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் கம்பீரமான தோற்றத்துடன் மஹிந்திராவின் எஸ்யூவி டிஎன்ஏவில் டியூவி300 உருவாகியுள்ள புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடலாகும்.

mahindra-tuv300-car மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

இந்தியாவின் முதன்மையான மற்றும் தனித்துவமான எஸ்யூவி தயாரிப்பாளரான மஹிந்திராவின் புதிய டியூவி300 எஸ்யூவி ஸ்கோர்ப்பியோ எகஸ்யூவி500 , பொலிரோ போன்ற பிரபலமான எஸ்யூவி வரிசையில் இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதலில் அறிமுகம் செய்த குவான்ட்டோ காம்பேக்ட் ரக எஸ்யூவி பெரிதான விற்பனையை பதிவு செய்யவில்லை. அதில் இருந்து மாறுபட்ட அனுகுமுறையில் மிட்டரலாக டியூவி300 வெளிவந்துள்ளது.

டியூவி300 வடிவம் மற்றும் உட்புறம்

TUV300 டிசைன்
 

டாங்கி தோற்றத்தின் உந்துதலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டியூவி300 காரில் மஹிந்திராவின் பாரம்பரிய கிரிலை ஜீப் பிராண்டின் எஸ்யூவி ஸ்டைலில் மேம்படுத்திய சரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

Mahindra-TUV300-Front-Grille மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

டாப் வேரியண்டில் ஸ்டேட்டிக் பென்டிங் முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது. இந்த முகப்பு விளக்குகள் வளைவுகளில் திரும்பும்பொழுது சிறப்பான வெளிச்சத்தை வளைவுகளில் தரவல்லது. செவ்வக வடிவ பனி விளக்குகள் கிளாசிக் தோற்றத்தில் வெகுவாக கவர்கின்றது. பக்கவாட்டில் நேரான கோடுகள் மற்றும் சில வளைவுகளை பெற்றுள்ளது. 17 இஞ்ச் ஆலாய் வீல் காரை மிக பெரிதாக காட்டுகின்றது. பின்பக்கத்தில் ஸ்பேர் வீலை பெற்றுள்ளது.

Mahindra%2B-TUV300-side1 மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

4 மீட்டருக்குள் (3995மிமீ) அமைந்திருந்தாலும்  டெயில் கேட்டில் ஸ்பேர்வீலை பெற்றிருப்பதனால் பெரிய எஸ்யூவி காராக டியூவி300 காட்சியளிக்கின்றது. மற்ற போட்டியாளர்களை போல நவீன ஸ்டைலாக இல்லாமல் போனலும். பாக்ஸ் வடிவத்தில் மற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவிகளை விட மிக  கம்பீரமாக உள்ளது.

டைனமோ சிவப்பு, மெஜஸ்டிக் சில்வர், போல்டு கருப்பு, மால்டென் ஆரஞ்ச் , வெர்வ் நீளம் மற்றும் க்ளேசியர் நீளம் என மொத்தம் 6 வண்ணங்களில் கிடைக்கும்

Mahindra-TUV300-Tailgate-Mounted-Spare-Wheel மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

TUV300 உட்புறம்

மஹிந்திரா கார்களின் இன்டிரியர் தரம் உயர்ந்து வருவதனை தற்பொழுது டியூவி300 எஸ்யூவி காரும் நிருபித்துள்ளது. இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ள இந்த காரில் கிரே மற்றும் பீஜ் என இரட்டை வண்ணத்தில் டேஸ்போர்டு சிறப்பாக அமைந்துள்ளது.

Mahindra-TUV300-interior மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

உட்புற கதவு கைப்பிடிகள் , கதவு பேட்கள் ஏசி வென்டுகள் என அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளது.  மிக தாரளமான இடவசதியை அதாவது மற்ற காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களை விட கூடுதலான வீல்பேஸ் (2680மிமீ) பெற்றுள்ளது. மேலும் மிக சிறப்பான ஹேட்ரூம் மற்றும் கால்களுக்கான லெக்ரூமை பெற்றுள்ளது.

5+2 என 7 இருக்கைகளை அதாவது 5 இருக்கைகளுடன் கூடுதலாக பின்புறத்தில் 2 ஜம்ப் இருக்கைகளை பெற்றுள்ளது. ஜம்ப் இருக்கையில் மிக குறுகலான இடத்தினை பெற்றுள்ளதால் பெரியவர்களுக்கு சற்று சிரமம் சிறுவர்கள் தாரளமாக அமர ஏதுவாக உள்ளது.

Mahindra-TUV300-interior1 மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

பொருட்களுக்கான பூட் ஸ்பேஸ் அளவு 384லிட்டர் பெற்றுள்ளது. அதுவே பின்புற ஜம்ப் இருக்கைகளை மடக்கினால் சுமார் 720லிட்டர் கெள்ளளவாக விரிவடைகின்றது.

ஓட்டுமொத்த உட்புறமும் சிறப்பான இடவசதி மற்றும் தரம் போன்றவற்றை பெற்று சிறப்பாக உள்ளது.

டியூவி300 என்ஜின் விபரம்

எம்ஹாக்80  1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

ஓரளவு நல்ல செல்திறனை வெளிப்படுத்தும் டியூவி300 எஸ்யூவி காரின் மைலேஜ் லிட்டருக்கு 18.49கிமீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டியூவி300 மைலேஜ் லிட்டருக்கு 13கிமீ முதல் 15 கிமீ வரை கிடைக்கும்.

mHawk80 மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

ஓட்டுதல் மற்றும் செயல்திறன் போன்றவை சிறப்பாக அமைந்துள்ளது. அதிர்வுகள் (வைபிரேஷன்) போன்றவை மிக குறைவாக உள்ளது.

முன்பக்கத்தில் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் ட்ரம் பிரேக்கினை பெற்றுள்ளது. சிறப்பான பிரேக்கிங் வெளிப்படுத்தும் டியூவி300 காரில் ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்றவை பேஸ் வேரியண்டை தவிர்த்து மற்ற அனைத்திலும் இருக்கின்றது. டியூவி300 எஸ்யூவி சிறப்பான வேகம் மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்களை கொண்டு விளங்குகின்றது.

டியூவி300 முக்கிய வசதிகள்

ஸ்டேட்டிக் முகப்பு விளக்குகள் , இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , பூளூடுத் யூஎஸ்பி ஆக்ஸ் , மஹிந்திரா பூளூ சென்ஸ் ஆப் , ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் , குரல் வழி கட்டளை , ஃபாலோ மீ முகப்பு விளக்கு , மைக்ரோ ஹைபிரிட் ,ஈக்கோ மோட்  போன்றவை முக்கியமானவையாகும்.

Comfort-%2526-Convenience_Intellipark மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்

டியூவி300 பாதுகாப்பு அம்சங்கள்

உறுதியான லேடர் ஃபிரேம் அடிச்சட்டத்தினை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள டியூவி300 காரில் ஏபிஎஸ் மற்றும் இபிடி போன்ற அடிப்படை பாதுகாப்பு அம்சங்கள் பேஸ் வேரியண்டை தவிர்த்து மற்றவற்றில் கிடைக்கின்றது. மேலும் முன்பக்க காற்றுப்பைகள் T4 , T6 வேரியண்டினை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்டிலும் உள்ளது.

டியூவி300 போட்டியாளர்கள்

ஈக்கோஸ்போர்ட் , டஸ்ட்டர் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யூவிகளுக்கு மிகுந்த சவாலாக அமைந்துள்ளது.

டியூவி300 ப்ளஸ்

 • மிக சிறப்பான விலை
 • மிரட்டலான தோற்றம்
 • சிறப்பான உட்புறம் மற்றும் வசதி
 • ஏஎம்டி கியர்பாக்ஸ்
டியூவி300 மைனஸ்
 • என்ஜின் செயல்திறன்
 • பெட்ரோல் மாடல் இல்லை
 • கடைசி இரண்டு இருக்கையில் பெரியவர்கள் அமருவது சிரமம்

மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி கார் வாங்கலாமா ?

சவாலான விலையில் அமைந்துள்ள மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி நல்லதொரு எஸ்யூவி மாடலாகும். பணத்திற்க்கு ஏற்ற மதிப்பு பல விதமான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை பெற்றுள்ள டியூவி300 எஸ்யூவி காரை தாரளமாக வாங்கலாம்.
 
 
Mahindra%2B-TUV300-rear மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி - கார் விமர்சனம்
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி
 
 

மஹிந்திரா டியூவி300 கார் விலை

 
 • டியூவி300 T4  : ரூ. 8.16 லட்சம்
 • டியூவி300 T4+  : ரூ.8.56 லட்சம்
 • டியூவி300 T6  : ரூ.8.91 லட்சம்
 • டியூவி300 T6+  : ரூ.9.23 லட்சம்
 • டியூவி300 T6+ AMT  : ரூ.10.06 லட்சம்
 • டியூவி300 T8  : ரூ.9.92 லட்சம்
 • டியூவி300 T8 AMT  : ரூ.10.75 லட்சம்
 

(டியூவி300 சென்னை ஆன்ரோடு விலை)

மதிப்பெண்: 3.5 / 5

Mahindra TUV300 SUV review in tamil

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin