மஹிந்திரா டியூவி300 பற்றி சில விவரங்கள்

மஹிந்திரா TUV300 எஸ்யுவி மிக சவாலான விலையில் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய டியூவி300 மிக கம்பீரமான தோற்றத்தில் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராக விளங்கும்.

மஹிந்திரா-TUV3OO
மஹிந்திரா TUV3OO

மஹிந்திரா TUV3OO என்ற பெயருக்கு Tough utility vehicle 3OO (3 double ‘Oh’) என்பது விளக்கமாகும். இந்த மாடல் ஸ்கார்ப்பியோ எஸ்யுவிக்கு கீழாக நிலைநிறுத்தப்பட உள்ளது.

1. தோற்றம்

மஹிந்திராவின் பாராம்பரிய  கிரில் தோற்றத்தினை பெற்றுள்ள TUV3OO போர் டாங்கியினை அடிப்படையாக கொண்டு மிக கட்டுஉறுதியான எஸ்யுவி காராக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டிலும் வளைவுகளை கொண்டுள்ள டியூவி300 பின்புறத்தில் ஸ்பேர் வீலை பெற்றுள்ளது. காம்பேக்ட் எஸ்யுவி கார் ரகங்களில் கம்பீரத்துடன் மஹிந்திரா டியூவி3OO விளங்கும். வடிவமைப்பதற்க்கான உதவியை உலக பிரசத்தி பெற்ற பினின்ஃபரீனா (பினின்ஃபரீனா நிறுவனத்தை வாங்க மஹிந்திரா திட்டமிட்டுள்ளது) செய்துள்ளது.

2. என்ஜின்

மஹிந்திரா டியூவி300 காரில் குவான்டோவில் உள்ள என்ஜினின் அரண்டாம் தலைமுறை 1.5 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜின் 78பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் கிடைக்கும்.

2 வீல் டிரைவ் ஆப்ஷனிலும் 4 வீல் டிரைவ் ஆப்ஷனில் சற்று தாமதமாக விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது.

மஹிந்திரா டியூவி300
மஹிந்திரா டியூவி300 

3. சர்வதேச மாடல்

மஹிந்திரா TUV300 எஸ்யூவி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. குறிப்பான இலங்கை , தென் ஆப்பரிக்கா , சிலி , நேபாளம் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு விற்பனைக்கு இந்த ஆண்டில் இறுதிக்குள் செல்ல உள்ளது.

டீசல் தவிர பெட்ரோல் ஆப்ஷனிலும் கிடைக்கும். இந்தியாவில் சற்று காலதாமதமாக பெட்ரோல் மாடல் கிடைக்கும்.

4. போட்டியாளர்கள்

க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரோனோ மற்றும் ஈக்கோஸ்போர்ட் போன்ற காம்பேக்ட் ரக எஸ்யுவி கார்களுக்கு கடும் சவாலாக இந்திய எஸ்யுவி விளங்கும்.

5. விலை விபரம்

மஹிந்திரா TUV300 காரின் விலை ரூ.7 லட்சம் முதல் 11 லட்சத்திற்க்குள் இருக்கும். இன்னும் 6 வாரங்களில் அதாவது செப்டம்பர் மாத மத்தியில் சந்தைக்கு வரவுள்ளது.

Mahindra TUV3OO SUV details

Comments

loading...