மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

ரூ.7.35 லட்சம் தொடக்க விலையில் மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, குவாண்டோ காரின் புதிய தலைமுறை மாடலே நூவோஸ்போர்ட் ஆகும்.

mahindra-nuvosport மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

முற்றிலும் குவாண்டோ காரினை புதுப்பித்து புதிய நவீன டிசைன் கொண்ட அம்சங்களுடன் பல விதமான நவீன வசதிகளை இணைத்து ஸ்கார்ப்பியோ மற்றும் டியூவி300 காரிகளின் தளத்தினை அடிப்படையாக கொண்டு நூவோஸ்போர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முகப்பில் நேர்த்தியான மஹிந்திராவின் பாரம்பரிய கிரிலுடன் சிறப்பான புதுப்பிக்கப்பட்ட முகப்பு விளக்கில் எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளை பெற்றுள்ளது. பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புறத்தில் பழைய மாடலினை தழுவியே உள்ளது.

உட்புறத்தில் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டில் 6 இஞ்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் , 5+2 என 7 இருக்கைகளை கொண்டுள்ளது. டியூவி300 காரில் உள்ளதே போலவே இன்டிரியர் அமைந்துள்ளது. 412 லிட்டர் பூட்ஸ்பேஸ் கொண்டுள்ள காரில் 850 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரிக்க முடியும்.

எம் ஹாக் 100 என்ஜின் 100 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் இழுவைதிறன் 240Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கும். மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல்களில் ஈக்கோ மற்றும் பவர் என இருவிதமான மோடினை பெற்றுள்ளது.

N4, N4+, N6, N6 AMT, N8 மற்றும் N8 AMT என மொத்தம் உள்ள 6 வேரியண்டில் N4 வேரியண்டினை தவிர்த்து மற்ற அனைத்து வேரியண்டிலும் முன்பக்க இரு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் இபிடி போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

mahindra-nuvosport-dashboard-1024x768 மஹிந்திரா நூவோஸ்போர்ட் எஸ்யூவி விற்பனைக்கு வந்தது

விட்டாரா பிரெஸ்ஸா , டியூவி300 , ஈக்கோஸ்போர்ட் போன்றவற்றுடன் நுவோஸ்போர்ட் போட்டியிட உள்ளது.

மஹிந்திரா நூவோஸ்போர்ட் விலை பட்டியல்

  • NuvoSport N4 – ரூ. 7.35 லட்சம்
  • NuvoSport N4+ – ரூ. 7.65 லட்சம்
  • NuvoSport N6 – ரூ. 8.36 லட்சம்
  • NuvoSport N6 AMT – ரூ. 9.00 லட்சம்
  •  NuvoSport N8 – ரூ. 9.12 லட்சம்
  • NuvoSport N8 AMT – ரூ. 9.76 லட்சம்

{ அனைத்தும் எக்ஸ்ஷோரூம் தானே }

[envira-gallery id="7097"]

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin