மஹிந்திரா புதிய கார்கள் – 2015

மஹிந்திரா கார் பிரிவில் வரும் 2015 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ள புதிய கார்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட மாடல்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் கானலாம்.

இந்தியாவின் முதன்மையான யூட்டலிட்டி கார் தயாரிப்பு நிறுவனம் மஹிந்திரா ஆகும்.

1. மஹிந்திரா பொலிரோ

இந்தியாவிலே அதிகம் விற்பனையாகும் எம்யூவி கார் பொலிரோ தான் குறைந்தபட்ச மாதம் 9000 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றது. புதிய தளத்தில் உருவாகி வரும் பொலிரோ தற்பொழுது சோதனை ஓட்டத்தில் உள்ளது. ஸ்கார்பியோ போல பொலிரோ எம்யூவி காரும் புதிய அடிச்சட்டம் முற்றிலும் மாறுபட்ட முகப்பு என உயர்வு பெற்றுள்ளது. மேலும் 4 மீட்டருக்குள் இருக்கலாம்.

mahindra bolero

2.  மஹிந்திரா எக்ஸ்யூவி 500

ads

மேம்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 500 காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் சோதனை ஓட்டத்தில் உள்ளது. மேலும் தானியங்கி கியர்பாக்ஸ் பெற்று விற்பனைக்கு வரலாம் மேலும் புதிய வேரியன்ட் மற்றும் ஹைபிரிட் மாடல் மேலும் சிறிய வெளிப்புற தோற்றங்களில் மாறுதல் பெற்றிருக்கும்.

XUV 500

3. மஹிந்திரா குவான்டோ

குவான்டா கார் விற்பனையில் சிறப்பாக இல்லை என்பதனால் மேலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டு தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகின்றது.

quanto

4. மஹிந்திரா வெரிட்டோ எலக்ட்ரிக்

மஹிந்திரா வெரிட்டோ காரில் எலக்ட்ரிக் மாடல் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளது.

verito electric

5. மஹிந்திரா எஸ்101

மஹிந்திரா எஸ்101 என்ற பெயரில் புதிய காரினை சோதனை செய்து வருகின்றது. தற்பொழுது தீவரமான சோதனை ஓட்டத்தில் உள்ளது. ஹேட்ச்பேக் கார் தோற்றத்தில் இருக்கும் ஆனால் எஸ்யூவி காராக விளங்கும்.

6. மஹிந்திரா ஸ்கார்பியோ

புதிதாக வந்துள்ள மூன்றாம் தலைமுறை ஸ்கார்பியோவில் தானியங்கி டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு வர வாய்ப்புகள் உள்ளது

scorpio
Mahindra & Mahindra Upcoming cars by year 2015

Comments