மஹிந்திரா மோஜோ பைக் விலை வெளியானது

மஹிந்திரா மோஜோ டூரிங் ரக ஸ்போர்ட்டிவ் பைக்கின் விலை விபரங்கள் விற்பனைக்கு வருமுன் கசிந்துள்ளது. மஹிந்திரா மோஜோ அறிமுகம் செய்த 5 வருடங்களுக்கு பிறகு வரும் அக்டோபர் 16ந் தேதி விற்பனைக்கு வருகின்றது.

மஹிந்திரா மோஜோ பைக்
மஹிந்திரா மோஜோ பைக்

மஹிந்திரா மோஜோ பைக்கின் அனைத்து விபரங்களும் வெளியாகிவிட்ட நிலையில் வரும் அக்டோபர் 16ந் தேதி முதல் டெலிவரி செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க்  29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம்.

 மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை.

மஹிந்திரா மோஜோ பைக்

மஹிந்திரா மோஜோ பைக்கினை ரூ.20,000 செலுத்தி முன்பதிவு செய்து கொண்டால் சிறப்பு பரிசுகள் உள்ளதாம்.

மேலும் படிக்க ; மஹிந்திரா மோஜோ முழுவிபரம்

மஹிந்திரா மோஜோ பைக் விலை ரூ.1,62,500 எக்ஸ்ஷோரூம். ஆன்ரோடு விலை ரூ. 1.92 லட்சத்திற்க்குள் இருக்கும். (மும்பை விலை)

மோஜோ பைக் முதற்கட்டமாக டெல்லி , மும்பை , புனே மற்றும் பெங்களூரு நங்கரங்களில் வரும் 16ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. சென்னை , கோல்கத்தா , கொச்சின் , ஹைத்திராபாத் மற்றும் அகமதபாத் போன்ற நிறுவனங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விற்பனைக்கு வரவுள்ளதாம்.  மேலும் ஏபிஎஸ் பொருத்தப்பட்ட மாடலும் அடுத்த வருடம் விற்பனைக்கு வருகின்றது.

மஹிந்திரா மோஜோ பைக்

Mahindra Mojo price leaked

Comments

loading...
Tags: