மஹிந்திரா யூவோ டிராக்டர் வரிசை அறிமுகம்

மஹிந்திரா டிராக்டர் பிரிவு புதிய மஹிந்திரா யூவோ டிராக்டர் வரிசையில் 5 விதமான குதிரைதிறன் கொண்ட டிராக்டர்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. 30 விதமான விவசாய பயன்பாடிற்கு ஏற்ற டிராக்டராக யூவோ விளங்கும்.

mahindra-yuvo-tractor-launch

சென்னை மஹிந்திரா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் கீழ் ரூ.300 கோடி முதலீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள யூவோ ரேஞ்ச் டிராகட்ரில் 32HP, 35HP, 40HP, 42HP மற்றும் 45HP என 5 விதமான ஹெச்பி ஆற்றலில் வந்துள்ளது.

யூவோ டிராக்டர் மாடல்கள்

  • யூவோ 265 DI
  • யூவோ 275 DI
  • யூவோ 415 DI
  • யூவோ 475 DI
  • யூவோ 575 DI

புதிய தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள யூவோ டிராக்டர்கள் 12 மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிறைகுறைகளின் அடிப்படையில் 7000 விதமான உள்ளீடுகளை பெற்று 140,000 மணிநேர ஆய்வகம் மற்றும் நிலங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

ரூ.4.49 லட்சம் தொடக்க விலை முதல் ரூ.6.49 லட்சம் வரையிலான விலையில் யூவோ டிராக்டர் வந்துள்ளது. தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் 400க்கு மேற்பட்ட டூலர்கள் வாயிலாக மஹிந்திரா யூவோ டிராக்டர் விற்பைக்கு வந்துள்ளது.

 

mahindra-yuvo-tractor-field

mahindra-yuvo-tractor

Comments

loading...