மஹிந்திரா ஸ்கார்பியோ

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவின் எஸ்யூவி கார்களை அதிகமாக விற்பனை செய்யும் முன்னனி ஆட்டோமொபைல் நிறுவனமாகும். ஸ்கார்பியோ அறிமுகத்திற்க்கு பின்னர் எஸ்யூவி மார்க்கெட்டில் முன்னனி இடத்தை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

முதல் தலைமுறை

1996 ஆம் ஆண்டில் ஸ்கார்பியோ காருக்கான அடித்தளம் ஆரம்பமாகியது.சுமார் 600 கோடி முதலீட்டில் உருவானதுதான் ஸ்கார்பியோ.

2002 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கார்பியோ தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.மேலும் தொடர்ந்து விற்பனையிலும் சிறப்பாக உள்ளது.

Mahindra Scorpio

இரண்டாம் தலைமுறை

2006 ஆம் ஆண்டில் சில உட்ப்பற மற்றும் வெளிப்புற மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் பெயர் ஆல் நியூ ஸ்கார்பியோ.

 2006 டில்லி ஆட்டோ எக்ஸ்போ ஹைபிரிட் நுட்பத்துடன் வரவுள்ள காரினை பார்வைக்கு வைத்தது. மேலும் பிக்-அப் ஸ்கார்பியோவாக உருவாக்க துவங்கியது.

2007 ஆம் ஆண்டில்  பிக்-அப் டிரக் ஸ்கார்பியோ அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெயர் ஸ்கார்பியோ கேட்வே ஆகும்.

 2007 ஆம் ஆண்டின் இறுதியில் m-Hawk டீசர் அறிமுகம் செய்யப்பட்டது.

Mahindra Scorpio pikup

மூன்றாம் தலைமுறை

2008 ஆம் ஆண்டில் டீசல் எலெக்ட்ரிக்-ஹைபிரிட்  உருவாக்கப்பட்டது.மேலும் 6 ஸ்பீடு ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் அறிமுகம் செய்யப்பட்டது.

பல பாதுகாப்பு அம்சங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக ABS,காற்றுப்பை போன்றவை. 

பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஸ்கார்பியோ ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஸ்கார்பியோ என்ஜின்

2.2 லிட்டர் CRDe 2197சிசி என்ஜின் பயன்படுத்துப்பட்டுள்ளது.மேலும் 16 வால்வ்கள் பொருத்தப்பட்டுள்ளது.5.7 நொடிகளில் 0-100km வேகத்தை தொடும். 120bhp சக்தியுடன் மற்றும் 290nm டார்க்கினை வெளிப்படுத்தும். 5  ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் மற்றும்  6 ஸ்பீடு ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன் பயன்படுத்தியுள்ளனர்.

ஸ்கார்பியோ மைலேஜ்

5  ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன்
நகரம்—10.5kmpl
நெடுஞ்சாலை–15.4kmpl

6  ஸ்பீடு ஆட்டோமொட்டிக் ட்ரான்ஸ்மிஷன்
நகரம்—9.6kmpl
நெடுஞ்சாலை–13kmpl
9 வகைகளில்  6 வண்ணங்களில் கிடைக்கின்றது. விலை 7 முதல் 12 இலட்சம் வரை உள்ளது.
Mahindra Scorpio rear

Comments