மஹிந்திரா ஸ்கார்ப்பியோ சிறப்பு விமர்சனம்

  இந்தியாவின் பெருமைகளில் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காருக்கு தனியான இடம் உண்டு என்பதை எவரும் மறுப்பதற்க்கில்லை. ஸ்கார்பியோ முரட்டு தன்மையை அடையாளமாக  கொண்ட இந்திய எஸ்யூவி காரின் முழுமையான சிறப்பு விமர்சனத்தை கானலாம்.

  ஸ்கார்ப்பியோ

  ஸ்கார்பியோ வரலாறு;

  2002 ஆம் ஆண்டில் இந்தியாவின் மஹிந்திரா குழுமத்தால் உருவாக்கப்பட்ட ஸ்கார்பியோ விற்பனைக்கு வந்தது. மிகவும் கவரக்கூடிய தோற்றத்தினை பெற்ற ஸ்கார்பியோ இந்தியர்களின் மனதில் இலகுவாக இடம் பெற்றது.

  2006 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை ஸ்கார்பியோ புதிய என்ஜின் மற்றும் சில மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்தது.

  2008 ஆம் ஆண்டில் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு வந்தது.

  ads

  2014 ஆம் ஆண்டில் புதிய தளத்தில் மிகவும் அதிகப்படியான மாற்றங்களை பெற்று 12 ஆண்டுகளுக்குப் பிறகு மிக பெரும் மாற்றங்களுடன் மூன்றாம் தலைமுறை ஸ்கார்ப்பியோ வெளிவந்துள்ளது.

  புதிய ஸ்கார்ப்பியோ 2014 

  மஹிந்திரா ஸ்கார்பியோ காரில் பல்வேறு விதமான புதிய வசதிகள் மற்றும் புதிய பரினாமத்தினை கொண்டுள்ளது. 

  தோற்றம்

  முந்தைய தலைமுறை மாடலின் தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது புதிய ஸ்கார்பியோ காரில் முகப்பில் வழக்கம் போல மஹிந்திராவின் பாரம்பரியமான 7 கோடுகள் கொண்ட தேன்கூடு கிரிலை பெற்றுள்ளது. 
  Scorpio
  முகப்பு விளக்குயில் கண்களின் புருவம் போல கொண்ட எல்இடி விளக்குகள் உள்ளன. மேலும் இது பார்க்கிங் விளக்காக செயல்படும். அழகான முகப்பு விளக்குகள் மற்றும் பனி விளக்குகளை பெற்றுள்ளது.
  New Mahindra Scorpio eyebrow
  முகப்பு பம்பர் மிகவும் கம்பீரத்தினை தருகின்றது. மேலும் அவற்றின் வளைவுகள் பெற்றுள்ளன. எம் ஹாக் என்ற பேட்ஜ் பொறிக்கப்பட்டுள்ளது.
  New Mahindra Scorpio alloy wheel
  Mahindra Scorpio taillight
  டோர்கள் மற்றும் கூரையில் எவ்விதமான பெரிதான மாற்றங்களும் இடம் பெறவில்லை. 5 ஸ்போக்களை கொண்ட 17 இன்ச் ஆலாய் வீல் மிக சிறப்பான கம்பீரத்தினை தருகின்றது. மேலும் பின்புற விளக்குகள் டி (D) வடிவில் உள்ளது.வெளிப்புறத் தோற்றத்தில் பல புதுமைகளை கவர்ந்து புதுமையான இளமையான தோற்றதினை பெற்று விளங்குகின்றது. 5 விதமான வண்ணங்களில் கிடைக்கும்.
  மஹிந்திரா ஸ்கார்ப்பியோ

  உட்ப்புறம்

  ஸ்கார்பியோ காரின் உட்ப்புறம் முந்தைய மாடலை விட முழுமையான மாற்றங்களை பெற்று விளங்குகின்றது. டேஸ்போர்டு புதிதாக அழகாக இருவண்ணங்களில் இழைத்துள்ளனர். கருப்பு மற்றும் பீஜ் கலரில் உள்ள டேஸ்போர்டில் ஸ்கார்பியோ என பொறித்துள்ளனர்.
  New Mahindra Scorpio dashboard
  மிகவும் நேர்த்தியான எக்ஸ்யூவி 500 காரின் ஸ்டீயரிங்கை ஸ்கார்பியோ பெற்றுள்ளது. ஸ்டீயரிங்கில் ஆடியோ, போன் , க்ரூஸ் கன்டோரல் போன்ற வசதிகள் பெற்றுள்ளன.
  பல நவீன வசதிகளை கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பொருத்தியுள்ளனர். எந்த கியரில் வண்டி இயங்குகின்றது. ஆர்பிஎம், என்ஜின் வெப்பநிலை , எரிபொருள் அளவு, என பலவற்றை பெற்றுள்ளது.
  Mahindra Scorpio
  சிறப்பு வசதிகள்;
  தானியங்கி முகப்பு விளக்குகள்
  தானியங்கி வைப்பர்கள்
  க்ரூஸ் கன்ட்ரோல்
  வாய்ஸ் அலர்ட்( சீட் பெல்ட் எச்சரிக்கை)
  பார்க்கிங் உதவி,
  டயர் அழுத்தம் காட்டும் கருவி,
  6 இன்ச் தொடுதிரை தகவமைப்பு
  யூஎஸ்பி, ஆக்ஸ், பூளூடூத், சிடி டிவிடி
  மிகவும் துள்ளியமான நேவிகேஷன் அமைப்பு
  Mahindra Scorpio interior 7 seat
  மிகவும் சிறப்பான இருக்கை வசதிகளை தாங்கியுள்ளது. முந்தைய மாடலை விட இடவசதி மேம்படுத்தியுள்ளனர் மேலும் பின்புற உள்ள இருக்கைகளை மடக்கினால் மிகவும் சிறப்பான இடவசதியினை பெறலாம்.
  டாப் மாடலான எஸ்10 மாடலில்தான் பல நவீன வசதிகள் உள்ளன.

  ஸ்கார்பியோ என்ஜின்

  ஸ்கார்பியோ காரில் இரண்டு விதமான 2.2 லிட்டர் எம்ஹவாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 125 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். இதன் முறுக்கு விசை 280 என்எம் கொண்டுள்ளது. மிகவுத் சக்திவாய்ந்த என்ஜினாகவும் மிக சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துகின்றது.
  மேலும் பேஸ் மாடல் எஸ் 2 காரில் மட்டும் 2.5 லிட்டர் என்ஜின் பொருத்தியுள்ளனர். இதன் ஆற்றல் 75பிஎச்பி ஆகும். இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும்.
  Mahindra Scorpio engine view
  இரண்டு என்ஜினிலும் 5 வேக மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டுள்ளது.
  2 வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் என இரண்டிலும் கிடைக்கின்றது. ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் எதிர்வரும் நாட்களில் வரலாம் ஆனால் உறுதியான தகவல் இல்லை.

  பாதுகாப்பு அம்சங்கள்

  முன்புறத்தில் டிஸ்க் பிரேக் பின்புறத்தில் ட்ரம் பிரேக் பொருத்தியுள்ளனர்.
  டாப் மாடலான எஸ் 10 காரில் பல பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது ஏபிஎஸ், இரண்டு காற்றுப்பைகள், கொலாப்சபள் ஸ்டீயரிங் பெற்றுள்ளது. மேலும் முந்தைய மாடலை விட பிரேக்கிங் செயல்திறன் மேம்பட்டுள்ளது. இன்னும் மேம்படுத்த வேண்டியுள்ளது.

  கையாளும் தன்மை

  புதிய அடிச்சட்டதினை பெற்றுள்ள ஸ்கார்ப்பியோ சொகுசு தன்மையில் மேம்ப்பட்டுள்ளது. முந்தைய மாடலை விட நிலைப்பு தன்மை மற்றும் டைனமிக்ஸ் என பல படிகள் உயர்வினை பெற்றுள்ளது. 
  New Mahindra Scorpio rear

  ஸ்கார்பியோ கார் மைலேஜ்

  ஸ்கார்பியோ கார் லிட்டருக்கு 15.3கிமீ மைலேஜ் தரும்

  மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் விலை

  எஸ் 2 —- ரூ.8.43 லட்சம்
  எஸ் 4 —-ரூ.9.08 லட்சம்
  எஸ் 4 (4WD)—-ரூ.10.24 லட்சம்
  எஸ் 6 —-ரூ.10.15 லட்சம்
  எஸ் 6 ப்ளஸ்—-ரூ.10.44 லட்சம்
  எஸ் 8 —-ரூ.11.40 லட்சம்
  எஸ் 10 —-ரூ.12.05 லட்சம்
  எஸ் 10 (4WD)—-ரூ.13.18 லட்சம்
  ex-showroom Chennai price

  ஆட்டோமொபைல் தமிழன் பார்வை

  முந்தைய மாடலைவிட பல படிகள் உயர்வு பெற்று விளங்கும் ஸ்கார்ப்பியோ காரில் பல நவீன வசதிகளை பெற்றுள்ளது டைனமிக் மற்றும் கையாளுமை சொகுசு திறன் ஆகியவற்றில் சிறந்த விளங்குகின்றது. 
  ஸ்கார்பியோ என்றுமே இந்தியாவின் முகங்களில் ஒன்று

  New Mahindra Scorpio rear view

  The Mahindra Scorpio is one of the best Indian SUV

  Comments