மஹிந்திரா e2o எலக்ட்ரிக் கார் விமர்சனம்

மஹிந்திரா ரேவா அறிமுகம் செய்துள்ள இரண்டாம் தலைமுறை ரேவா என்எக்ஸ்ஆர் காரான e2o எலக்ட்ரிக் காரின் விரிவான அலசலாக இந்த பதிவில் பார்க்கலாம். மஹிந்திரா e2o கார் வாங்கலாமா என்பதனை கானலாம்.

ரேவா என்எக்ஸ்ஆர் காரினை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள e2o (உச்சரிப்பு ee-too-oh) எலக்ட்ரிக் கார் இந்தியாவின் எதிர்காலத்திற்க்கான எலெக்ட்ரிக் காரில் புதிய தொடக்கத்தை தரும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
Mahindra e2o
e2o கார் மோட்டார்
மஹிந்திரா e2o காரில் 3 பேஸ் இன்டக்‌ஷன் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் வெளிப்படுத்தும் அதிகபட்ச ஆற்றல் 25.4 பிஎச்பி (19kw) ஆகும் இதன் டார்க் 53என்எம் ஆகும். முழுமையான ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
e2o கார் பேட்டரி
e2o காரில் 48வோல்ட் ஜீரோ பராமரிப்பு கொண்ட பேட்டரி பயன்படுத்தியுள்ளனர். சார்ஜ்க்கு பிளக் சாதரன 220 வோல்ட் 15SPA சாக்கட் பயன்படுத்தலாம். அதாவது எல்லா வீட்டிலும் பயன்படுத்தும் பிளக்கே போதுமானது. பேட்டரி முழுமையாக சார்ஜ் ஏற 5 மணி நேரம் ஆகும்.
Mahindra e2o battery display
e2o கார் பயணம்
e2o காரின் பேட்டரி முழுமையாக இருந்தால் 100 கீமி வரை பயணிக்கலாம். அதாவது 1 மணி நேர சார்ஜ்க்கு 20கீமி வரை பயணிக்கலாம். மேலும் இந்த காரில் பயன்படுத்தப்பட்டுள்ள ரேவ்இவ் நுட்பத்தினால் அலைபேசினை கொண்டு 8 முதல் 9 கீமி வரை பயணிக்கலாம். இது அவசர காலத்துக்கு மட்டும் உதவும்.
மேலும் இதில் உள்ள சிறப்பம்சம் பிரேக் பிடிக்கும் பொழுது உண்டாகும் ஆற்றலை ரீஜெனரேட்டிவ் முறையில் பேட்டரிக்கு சார்ஜ் செய்யப்படுகிறது.

Mahindra e2o interior
e2o கார் சிறப்பு வசதிகள்
e2o காரில் அதிகப்படியான சிறப்பு வசதிகள் உள்ளன. அவை விலைக்கான உத்திரவாதத்தை தருகின்றது. 2 கதவுகளை கொண்டது . 4 பெரியவர்கள் இயல்பாக அமர்ந்து பயணிக்கலாம்.
1. மலையேற ஹோல்டிங்
2. ரிவர்ஸ் கேமரா
3.  6” இன்ச் தொடுதிரை ஜிபிஎஸ் நேவிகேஷன் அமைப்பு உள்ளது. இது நேவிகேஷனுக்கு மட்டுமல்ல வாகனத்தின் முழுமையான பல விவரங்களை காட்டும்.
4. கியர் க்ளட்ச் என எதுவும் இல்லாததால் நெருக்கடியான சாலைகளிலும் எளிதாக பயணிக்கலாம்.
5. ஒரு தொடல் மூலம் இருக்கைகள் மடக்கி விடலாம்.
6.  ஏசி மற்றும் ஹிட்டர் போன்றவைகளை ரிமோட் பட்டன் மூலம் இயக்கலாம்  அல்லது உங்கள் விருப்பமான நேரங்களில் ஆன்/ஆஃப் செய்யக்கூடிய வகையில் திட்டமிட்டு வைத்து கொள்ளலாம்.
7. எல்ஈடி பின்புற விளக்குகள்
8. பூளுடுத்,யூஎஸ்பி, தொடர்பு

Mahindra e2o instument cluster
9. ஆண்டராய்ட், பிளாக்பபெர்ரி, ஐ போன் போன்ற போன்கள் மூலம் இதில் பொருத்தப்பட்டுள்ள சிம் வழியாக செயற்க்கைகோள் இணைப்பினை ஏற்படுத்தி கொள்ளலாம்.
10. வாகனத்த்தின் டோர் லாக்/ அன்லாக் செய்ய உங்கள் ஸ்மார்ட்போன் போதும்.
11. வாகனத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டால் உங்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வந்துவிடும்.
இன்னும் பல விதமான வசதிகளை கொண்டதாகும்.

Mahindra e2o navigation
e2o கார் பாதுகாப்பானதா
இந்த காரில் உள்ள பிரேம் ஆனது மிக சிறப்பான பாதுகாப்பினை தரக்கூடியதாகும். பிரேம்களை இனைக்க ஸ்பாட் வெல்டிங் முறையை தவிர்த்துவிட்டு பார்முலா 1 கார்களில் பயன்படுத்தும் இன்டிரிகேட் பான்டிங் முறையை பயன்படுத்தியுள்ளனர். ஐஎஸ்ஒபிக்ஸ் குழந்தைகள் இருக்கை, ஏஎல்ஆர் இருக்கை பெல்ட், முன்புறம் 6 ஆற்றல் கடத்தல் அமைப்பு
மேலும் இதில் உள்ள மூன்று பம்பர் மற்றும் க்ரம்பல் ஜூன் பாதுகாப்பபு வசதிகள் கொண்டது. காற்றுப்பைகள் இல்லையென்றாலும் சிறப்பான ஐரோப்பாவின் பாதுகாப்பு விதிகளை பின்பற்றியுள்ளனர்.

Mahindra e2o frame
மஹிந்திரா e2o கார் வாங்கலாமா
e2o கார் நிச்சியமாக வாங்கலாம் சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மேலும் பல மதிப்பு கூட்டப்பட்ட சொகுசு வசதிகள், சூற்றுசூழலை பாதிக்கவே பாதிக்காது. விலைதான் சற்று கூடுதலாக இருந்தாலும் அரசு வரிகளை குறைத்தால் நிச்சியமாக சிறப்பான வரவேற்பினை பெறும். அலுவலக பயன்பாட்டிற்க்கு ஏற்ற சிறப்பான காராக இருக்கும். சிறப்பான இடவசதி கொண்டது. வெறும் 60 பைசாவில் 1 கீமி பயணிக்கலாம்.

Mahindra e2o view

Mahindra e2o seat

Mahindra e2o
மேலும் பல விவரங்கள் காத்திருக்கின்றது..காத்திருங்கள்….


மஹிந்திரா e2o எலக்ட்ரிக் கார்
Reviewed by Rayadurai on Mar 19 2013
Rating: 4/5

Comments