மஹிந்திரா KUV100 க்ராஸ்ஓவர் எஸ்யூவி எப்பொழுது

மஹிந்திரா நிறுவனம் புதிய கேயூவி100 என்ற பெயரில் க்ராஸ்ஓவர் ரக தொடக்க நிலை யுட்டிலிட்டி வாகனத்தை அடுத்த வருட தொடக்கத்தில் அறிமுகம் செய்ய உள்ளது.

mahindra-tuv300%2B%25282%2529
TUV300 மாதிரி படம்

KUV100 என்றால் krossover utility vehicle என்பது இதன் விளக்கமாகும். இந்த க்ராஸ்ஓவர் ரக மினி எஸ்யூவி 4 மீட்டருக்குள் 5 இருக்கையுடன் மிக சிறப்பான இடவசதி மற்றும் பூட் ஸ்பேஸை கொண்டிருக்கும்.

loading...

மினி எஸ்யூவி காராக வரவுள்ள புதிய கேயூவி100 எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு என்ஜின் ஆப்ஷனிலும் வரவுள்ளது. மஹிந்திராவின் புதிய 1.2லிட்டர்  பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்ட மாடலாக வரவுள்ளது.

மஹிந்திராவின் சாங்யாங் பிரிவுடன் இணைந்து உருவாக்கப்பட உள்ள இந்த புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் சிறப்பான ஆற்றல் மற்றும் கூடுதல் மைலேஜ் வழங்கும். மேலும் 1.2 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இதில் மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கும்.

புதிய கேயூவி100 எஸ்யூவி அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் சந்தைக்கு வரலாம். தற்பொழுது மஹிந்திரா S101 என்ற குறியீட்டு பெயரில் சோதனை ஓட்டத்தில் உள்ளது.

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin