மஹிந்திரா XUV ஏரோ கூபே எஸ்யூவி அறிமுகம் – ஆட்டோ எக்ஸ்போ 2016

மஹிந்திரா XUV500 காரினை அடிப்படையாக கொண்ட மஹிந்திரா XUV ஏரோ கூபே ரக எஸ்யூவி மாடல் பார்வைக்கு வந்துள்ளது.  210Bhp ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 0 முதல் 100 கிமீ வேகத்தினை 6 விநாடிக்குள் எட்டிவிடும்.

mahindra-xuv-aero-coupe-suv

loading...

டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு வந்துள்ள எக்ஸ்யூவி ஏரோ மாடல் உற்பத்திக்கு எடுத்து செல்ல மஹிந்திரா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்தாலியின் பிரபலமான டிசைன் நிறுவனம் பின்னின்ஃபாரினா டிசைன் நிறுவனத்தினை கடந்த வருடத்தின் இறுதியில் மஹிந்திரா கையகப்படுத்தியது.

பின்னின்ஃபாரினா நிறுவனத்தின் உதவியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள எக்ஸ்யூவி ஏரோ மாடலில் 4 கதவுகளை கொண்டுள்ளது. பெருமாபாலான தோற்ற அமைப்பு எக்ஸ்யூவி500 காரினை தழுவியுள்ளது. பின்புறத்தில் கூபே ரக கார்களின் தோற்றத்தினை பெற்று கிடைமட்ட டெயில் விளக்கினை பெற்றுள்ளது.

முகப்பில் புதிய ஹெட்லைட் , புதிய பகல் நேர எல்இடி ரன்னிங் விளக்குகள் , ஸ்போர்ட்டிவ் தோற்ற அமைப்பினை தரவல்ல பாடி கிட்கள் , மிகவும் ஸ்டைலிசாக உள்ள எக்ஸ்யூவி ஏரோ மாடல் எக்ஸ்யூவி500 எஸ்யூவி காருக்கு மேல் நிலை நிறுத்தப்படலாம் . உட்புறத்திலும் பல நவீன அம்சங்களை பெற்றிருக்கும். மஹிந்திரா எக்ஸ்யூவி ஏரோ விற்பனைக்கு வரும்பொழுது குறைந்தவிலை கொண்ட கூபே ரக எஸ்யூவியாக விளங்கும்.

[envira-gallery id="7151"]

loading...
44 Shares
Share44
Tweet
+1
Pin