மாருதி ஆல்ட்டோ, ஸ்விப்ட், டிசையருக்கு புதிய கடன் திட்டம்

இந்தியாவின் முன்னணி நிறுவனமான மாருதி சுஸூகி ஸ்விப்ட் டிசையர், ஆல்ட்டோ கார்களுக்கு 0 சதவீத வட்டியில் கடன் தருவதாக அறிவித்துள்ளது. இந்த கடன் திட்டத்தால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்ட்டோ, டிசையர் போன்ற மாருதியின் முன்னணி மாடல்களுக்கு அறிமுகம் செய்ததில் இருந்து சலுகைகள் வழங்கியது இல்லை. மேலும் பல்வேறு விதமான சலுகைகளை வழங்குவதனை முன்பே பதிவிட்டிருந்தேன்.

மாருதி ஸ்விப்ட்

0 சதவீத கடன் திட்டம் மற்றும் சலுகைகள் போன்றவற்றை அறிவித்துள்ளது. எனவே இதன் மூலம் விற்பனை அதிகரிக்கும் என கருதுகின்றது.மேலும் மாருதி பைபேக் ஆஃபரினை அறிவித்துள்ளது. 3 முதல் 4 வருடம் கழித்து வாகனத்தை விற்க்கும் பொழுது மாருதியே திரும்ப வாங்கி கொள்ளும்.

மாருதி மட்டுமல்ல இந்தியாவின் பல தானுந்து நிறுவனங்கள் அனைத்தும் சலுகைகள் வழங்கி வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளாக இல்லாத அளவில் கார் விற்பனை சரிந்துள்ளது.

Comments