மாருதி ஆல்ட்டோ 800 ஓணம் எடிசன்

மாருதி ஆல்ட்டோ 800 காரின் சிறப்பு ஓணம் பதிப்பினை கேரளாவில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஆல்டோ 800 காரின் ஓணம் பதிப்பில் கூடுதல் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

Maruti-Suzuki-Alto-800-Onam மாருதி ஆல்ட்டோ 800 ஓணம் எடிசன்

சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் ஆல்ட்டோ 800 காரின் ஓணம் பதிப்பு கேரளா வாடிக்கையாளர்களுக்காக இந்த சிறப்பு பதிப்பினை கொண்டு வந்துள்ளது.

45பிஎச்பி ஆற்றலை தரவல்ல 796சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் முறுக்குவிசை 69என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.

மாருதி ஆல்டோ 800 ஓணம் சிறப்பு எடிசனில் 15 வசதிகள் உள்ளன. அவை

1. ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்
2.மியூசிக் அமைப்பு
3. 2 வே ஸ்பீக்கர்
4. டிசைனர் இருக்கை கவர்
5. ரேஸ் போட் வடிவ டிஸூ பாக்ஸ்
6. டிசைனர் மேட்
7,மட் ப்ளாப்
8. டோர் ஷில் கார்ட்
9. அம்பியன்ஸ் விளக்கு
10. டோர் வைசர்
11. ஓனம் கிராஃபிக்ஸ்
12. பிளாட்டினம் ப்ளஸ் டகல்
13.கார் பெர்ஃப்யூம்
14.பிரிமியம் எம்பிராய்ட்ரி
15.கார் சார்ஜர்

Maruti-Suzuki-Alto-800-Onam-Limited-Edition-interior மாருதி ஆல்ட்டோ 800 ஓணம் எடிசன்

இந்த சிறப்பு ஓணம் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகளில் மதிப்பு ரூ.17,350 ஆகும். ஆல்ட்டோ 800 சிறப்பு பதிப்பு ஓணம் பண்டிகைக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வரும் 28ந் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

Maruti Alto 800 Onam Edition launched in Kerala

loading...
0 Shares
Share
Tweet
+1
Pin