மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் படங்கள் வெளியானது

மாருதி எர்டிகா எம்பிவி காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி சுசூகி எர்டிகா வரும் இந்தோனேசியா மோட்டார் கண்காட்சியில் பார்வைக்கு வருவதற்க்கு முன்பாக புதிய மாருதி எர்டிகா படங்கள் வெளியானது.

2015-Maruti-Ertiga-mpv மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் படங்கள் வெளியானது
இந்திய சந்தையில் தொடக்க நிலை எம்பிவி காரில் மிக சிறப்பான விற்பனையை எண்ணிக்கை பதிவு செய்து வரும் எர்டிகா காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் வரும் 20 முதல் 30 வரை நடைபெறவுள்ள இந்தோனேசியா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பல கூடுதல் வசதுகளுடன் விற்பனைக்கு வரவுள்ள புதிய எர்டிகா காரின் தோற்றத்தில் சில மாற்றங்களை பெற்றுள்ளது. முகப்பில் குரோம் பட்டைகளுக்கு மத்தியில் சுசூகி லோகோ பதிக்கப்பட்டுள்ளது. 
2015-Maruti-Ertiga-interior மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் படங்கள் வெளியானது
மேலும் பனி விளக்கு அறையில் குரோம் பூச்சூ என முந்தைய மாடலைவிட பிரிமிம் தோற்றத்துக்கு மாறியுள்ளது. 
பக்கவாட்டில் புதிய ஆலாய் வீல் உள்ளது. பின்புறத்தில் இன்னோவா காரில் உள்ளது போல குரோம் பட்டையில் ரிஃபெலக்டர் இணைக்கப்பட்டுள்ளது.
என்ஜினில் எந்த மாற்றங்களும் இருக்காது . கூடுதல் வசதிகள் இணைக்கப்பட்டிருக்கலாம். மிக விரைவில் இந்திய சந்தைக்கு வரவுள்ளது.
2015-Maruti-Ertiga-rear மாருதி எர்டிகா ஃபேஸ்லிஃப்ட் படங்கள் வெளியானது
image credits:autonetmagz.com
loading...
0 Shares
Share
Tweet
+1
Pin