மாருதி எர்டிகா சிஎன்ஜி விரைவில்

மாருதி நிறுவனத்தின் பல பயன் வாகனமான எர்டிகாவில் சிஎன்ஜி மாறுபட்டவை இன்னும் சில மாதங்களில் விற்பனைக்கு வரும். இந்தியாவிலே மிக அதிகமாக விற்பனையாகும் எம்பிவி எர்டிகா ஆகும்.

தற்பொழுது எர்டிகா காருக்கு போட்டிகள் அதிகரித்துள்ளது குறிப்பாக மஹிந்திரா குவான்ட்டோ மற்றும் ரெனால்ட் டஸ்ட்டர் எஸ்யூவி ஆகியவை சாவலினை ஏற்படுத்தியுள்ளது. எனவே விற்பனையை அதிகரிக்க சிஎன்ஜியில்  மாருதி எர்டிகா விற்பனைக்கு வரும்.

Maruti Ertiga MPV

மாருதி எர்டிகா சிஎன்ஜியில் வெளிவந்தால் இந்தியாவில் முதல் சிஎன்ஜி எம்பிவி காராக எர்டிகா விளங்கும். தற்பொழுது மாதத்திற்க்கு 5000 கார்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி எர்டிகா சிஎன்ஜி மாதத்திற்க்கு 1000 முதல் 1500 கார்கள் விற்க திட்டமிட்டுள்ளது.

Comments