மாருதி எர்டிகா பேசியோ சிறப்பு பதிப்பு அறிமுகம்

மாருதி சுசூகி எர்டிகா எம்பிவி காரின் பேசியோ எக்ஸ்புளோர் என்ற பெயரில் சிறப்பு வரையறுக்கப்பட்ட பதிப்பினை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாருதி எர்டிகா எம்பிவி கார் இரண்டு இலட்சம் விற்பனையை கடந்துள்ளது.

மாருதி எர்டிகா

கடந்த 2012ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட மாருதி எர்டிகா எம்பிவி இரண்டு லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளதை கொண்டாடும் வகையில் இந்த சிறப்பு பதிப்பினை புதிய பாடி கிராஃபிக்ஸ் மற்றும் கூடுதல் வசதிகளை இணைத்துள்ளது.

மாருதி எர்டிகா paseo

எர்டிகா பேசியோ எக்ஸ்புளோர் பதிப்பில் வெளிதோற்றத்தில் கருப்பு நிற ஸ்டிக்கர்கள் , சிறப்பு வண்ண பாடி கிராஃபிக்ஸ் , ரியர் ஸ்பாய்லர்  போன்றவற்றை பெற்றுள்ளது.

உட்புறத்தில் சீட் இருக்கை , கூல் / வார்ம் பாக்ஸ் , பூளூடூத் , ஸ்டீயரிங் வீல் கவர் , ஸ்டீயரிங் வீலில் கட்டுப்பாடு பொத்தான்கள் , மல்டி டிவைஸ் சார்ஜர் , எர்டிகா பிராண்டு கதவு சில் பிளேட் , டிஜிட்டர் டயர் இன்ஃபிளேட்டர் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் போன்ற வசதிகளை பெற்றுள்ளது.

ads

இந்த சிறப்பு பதிப்பானது VXi மற்றும் VDi வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். மாருதி எர்டிகா காரில் 1.4 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தியுள்ளனர்.

மாருதி எர்டிகா paseo

Maruti Suzuki Ertiga Paseo Explore edition

Comments