மாருதி எஸ் கிராஸ் கார் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி எஸ் கிராஸ் கார் ரூ.8.34 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி S கிராஸ் கிராஸ்ஓவர் நெக்ஸா டீலர்கள் வழியாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மாருதி எஸ் கிராஸ்

மாருதியின் நெக்ஸா பிரிமியம் டீலர்கள் வழியாக சந்தைக்கு வந்துள்ள எஸ் கிராஸ் பிரிமியம் மாடல்களுக்கு கடும் சவாலினை தரவுள்ளது. மாருதி சுசூகி வளர்ச்சி பாதையில் புதிய பயணத்தை தொடங்கியுள்ளது.

தோற்றம்

எஸ் கிராஸ் கார் கிராஸ்ஓவர் ரக மாடல் என்பதால் பாடி கிளாடிங் , வீல் ஆர்ச் , ரூஃப் ரெயில்கள் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது. 4300மிமீ நீளம் கொண்ட இந்த காரில் சிறப்பான இடவசதி மற்றும் பூட் வசதியும் உள்ளது.

பக்கவாட்டில் 16 இஞ்ச் ஆலாய் வீலை பெற்றுள்ளது. முகப்பில் எஃஐடி தானியங்கி முகப்பு விளக்குகள் , பனி விளக்கு அறையில் குரோம் பூச்சூ என S க்ராஸ் பளிச்சென மனதில் இடம் பிடிக்கின்றது.

நீலம் , பிரவுன் , வெள்ளை , கிரே மற்றும் சில்வர் என 5 விதமான வண்ணங்களில் எஸ் க்ராஸ் கிடைக்கும்.

உட்புறம்

மிக அருமையாக ஃபினிஷ் கொண்ட ஸாஃப்ட் டச் டேஸ்போர்டு , தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பின் உதவியுடன் பூளூடூத் தொடர்பு , ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான்  , லெதர் இருக்கைகள் ஸ்மார்ட் போன் தொடர்பு போன்றவற்றை எஸ் கிராசில் பெற்று கொள்ளமுடியும்.

மாருதி எஸ் கிராஸ்

என்ஜின்

ஃபியட் நிறுவனத்தின் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின்களை எஸ் கிராஸ் காரில் பயன்படுத்தியுள்ளனர்.

 DDiS 200 என்ற பெயரில் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் 89பிஎச்பி ஆற்றல் மற்றும் 200என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி எஸ் கிராஸ் engine

DDiS 320 என்ற பெயரில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 118பிஎச்பி ஆற்றல் மற்றும் 320என்எம் டார்க்கையும் தரவல்லது. 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.

மாருதி சுசூகி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 23.65கிமீ மற்றும் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் மைலேஜ் லிட்டருக்கு 22.7கிமீ ஆகும்

பாதுகாப்பு அம்சங்கள்

முன் மற்றும் பின் பக்கங்களில் டிஸ்க் பிரேக் , ஓட்டுநர் காற்றுப்பைகள் அனைத்து வேரியண்டிலும் உள்ளது. இரட்டை காற்றுப்பைகள் மற்ற வேரியண்டில் உள்ளது. ஏபிஎஸ் பிரேக் , ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகள் உள்ளன.

மாருதி எஸ் கிராஸ்

மாருதி சுசூகி எஸ் கிராஸ் விலை விபரம் (ex-showroom Delhi)

மாருதி எஸ் கிராஸ் DDiS 200

மாருதி எஸ் கிராஸ் சிக்மா – ரூ.8.34 லட்சம்
மாருதி எஸ் கிராஸ் டெல்டா – ரூ. 9.15 லட்சம்
மாருதி எஸ் கிராஸ் ஜெட்டா ரூ. 9.99 லட்சம்
மாருதி எஸ் கிராஸ் ஆல்ஃபா – ரூ. 10.75லட்சம்

மாருதி எஸ் கிராஸ் DDiS 320

மாருதி எஸ் கிராஸ் டெல்டா ரூ.11.99 லட்சம்
மாருதி எஸ் கிராஸ் ஜெட்டா – ரூ. 12.99லட்சம்
மாருதி எஸ் கிராஸ் ஆல்ஃபா – ரூ. 13.74லட்சம்

Maruti Suzuki S-Cross Crossover launched in India

Comments

loading...