மாருதி சுசுகி ஸ்விஃப்ட் ஸ்டார் அறிமுகம்

மாருதி சுசுகி நிறுவனத்தின் மிக பிரபலமான ஸ்விஃபட் ஹேட்ச்பேக் 30 லட்சம் கார்களை கடந்து விற்று வருகின்றது. இதனை கொண்டாடும் வகையில் ஸ்விஃப்ட் ஸ்டார் என்ற பெயரில் மாருதி ஸ்விஃப்ட்டின் வரையறுக்கப்பட்ட பதிப்பினை வெளியிட்டுள்ளது.

  ஸ்விஃப்ட் வரையறுக்கப்பட்ட பதிப்பில் சில வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அவை டபூள் டின் ஸ்டீரியோ இனைப்புடன் பூளுடூத், லெதர் இருக்கை உறைகள், பின்புற கூரை ஸ்பாய்லர், ஸ்டீரியங் வீல் உறை மற்றும் தரை விரிப்பு. வேறு எந்த மாற்றங்களும் இல்லை.

Swift Star

 ஸ்விஃப்ட் ஸ்டார் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். இவை  ஸ்விஃப்ட் காரின் பேஸ் மற்றும் மிடில் மாறுபட்டவைகளில் மட்டும் கிடைக்கும். புதிதாக சேர்க்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ 23,000 ஆகும்.

இந்தியாவிலே மிக அதிகப்படியான விற்ற கார்களில் இரண்டாம் இடத்தில்  ஸ்விஃப்ட் உள்ளது.

Comments