மாருதி சுசூகி எஸ் கிராஸ் முன்பதிவு தொடங்கியது

மாருதி எஸ் கிராஸ் க்ராஸ்ஓவர் ரக எஸ்யுவி காருக்கான டீலர்கள் வழியாக முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.  மாருதி எஸ் கிராஸ் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் என இரண்டு டீசல் என்ஜின் ஆப்ஷனில் வரவுள்ளது.

மாருதி சுசூகி எஸ் கிராஸ்
மாருதி சுசூகி எஸ் கிராஸ் 

இந்தியாவின் முன்னனி தயாரிப்பாளரான மாருதி சுசூகி தனது புதிய க்ராஸ்ஓவர ரக மாடலுக்கு முன்பதிவு கட்டணமாக ரூ.11,000 பெற்று கொள்கின்றது.

மாருதி சுசூகி எஸ் கிராஸ்
மாருதி சுசூகி எஸ் கிராஸ் பிரவுன் கலர்

எஸ் கிராஸில்  5 வேரியண்டில் 8 விதமான வரிசைகளில் எஸ் கிராஸ் வரவுள்ளது. சிக்மா , சிக்மா (O) , டெல்டா , ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா ஆகும். இவற்றில் 1.3 லிட்டர் DDiS 200 என்ஜின் அனைத்து வேரியண்டிலும் டாப் வேரியண்ட்களான டெல்டா , ஜெட்டா , மற்றும் ஆல்ஃபா போன்றவற்றில் 1.6 லிட்டர் DDiS 320 என்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மேலும் வாசிக்க ; எஸ் க்ராஸ் வேரியண்ட் விபரம்

மாருதி சுசூகி எஸ் க்ராஸ் போட்டியாளர்கள் வரவிருக்கும் க்ரெட்டா , டஸ்ட்டர் , டெரானோ போன்றவை ஆகும். மொத்தம்  வண்ணங்களில் கிடைக்கும் அவை  பிரவுன் , பூளூ , வெள்ளை, சில்வர் மற்றும் கிரே ஆகும்.

மாருதி நெக்ஸா டீலர்கள் வழியாக மாருதி சுசூகி எஸ் கிராஸ் விற்பனை செய்ய உள்ள நிலையில் இன்னும் சில வாரங்களில் 30க்கு மேற்பட்ட டீலர்கள் தொடங்க உள்ளனர்.

வரும் ஆகஸ்ட் தொடக்கத்தில் மாருதி சுசூகி எஸ் கிராஸ் விற்பனைக்கு வருகின்றது.

மாருதி சுசூகி எஸ் கிராஸ்

Maruti Suzuki S-Cross bookings open

Comments

loading...