மாருதி சுசூகி சியாஸ் ஹைபிரிட் விற்பனைக்கு வந்தது

மாருதி சுசூகி சியாஸ் SHVS டீசல் ஹைபிரிட் மாடல் ரூ.9.92 லட்சம் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாருதி சியாஸ் டீசல் இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை பெற்றுள்ளது.

மாருதி சுசூகி சியாஸ்

SHVS ஹைபிரிட் நுட்பத்தில் உள்ள வசதிகள் என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் நுட்பம் , பிரேக் ஆற்றலை திரும்பளிக்கும் வசதி , என்ஜின் ஆற்றலுக்கு உதவும் வசதி போன்றவை உள்ளது.

1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜினுடன் இணைந்த SHVS ஹைபிரிட் நுட்பத்தில் இன்டகிரேட்டடு ஸ்டார்ட்ர் மோட்டாரை கூடுதலாக பெற்றுள்ளது. இந்த ஹைபிரிட் நுட்பத்தில் பிரேக் செய்யும்பொழுது ஏற்படும் ஆற்றலை மிகுந்த திறன்மிக்க பேட்டரி கொண்டு சேமித்து வைக்கின்றது. இந்த ஆற்றல் என்ஜின் ரீஸ்டார்ட் செய்ய மற்றும் ஆட்டோ ஸ்டார்ட் செய்ய உதவுகின்றது.  இதன் என்ஜின் பவர் அசிஸ்ட் நுட்பம் என்ஜினுக்கு அதிக ஆற்றலை தேவைப்படும்பொழுது ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றது.

முந்தைய தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லை . பின்புறத்தில் SHVS  பேட்ஜ் மட்டும் உள்ளது. மேலும் உட்புறத்தில் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் மேம்படுத்தி கியர் ஷிஃப்ட் இன்டிகேட்டர் இணைக்கப்பட்டுள்ளது.

ads

மாருதி சுசூகி சியாஸ்

88.5பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முறுக்குவிசை 200என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் காராக மாருதி சுசூகி சியாஸ் டீசல் மாடல் லிட்டருக்கு 28.09கிமீ தரும்.

முந்தைய சாதரன டீசல் மாடல் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. 5 வேரியண்ட்கள் உள்ளது. அவற்றில் ஓட்டுநருக்கான காற்றுப்பைகள் நிரந்தர அம்சமாக உள்ளது. மற்ற வேரியண்டில் இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

மாருதி சுசூகி சியாஸ் ஹைபிரிட் டீசல் விலை விபரம் (ஆன்ரோடு சென்னை விலை விபரம் )

மாருதி சியாஸ் SHVS VDi : ரூ.9.92 லட்சம்
மாருதி சியாஸ் SHVS VDi (O) : ரூ.10.09 லட்சம்
மாருதி சியாஸ் SHVS VDi+ : ரூ.10.60 லட்சம்
மாருதி சியாஸ் SHVS VXi : ரூ.11.19 லட்சம்
மாருதி சியாஸ் SHVS VXi+ : ரூ.12.70 லட்சம்

மாருதி சுசூகி சியாஸ்

Maruti Ciaz SHVS diesel hybrid launched

Comments